சினிமாவிலும் சின்னத்திரையிலும் கலக்கி வரும் நடிகை ராதிகா சரத்குமாரின் சிறு வயது முதல் தற்போது வரையிலான மலரும் நினைவுகளை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
1978 இல் கிழக்கே போகும் ரயில் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராதிகா. பின்னர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து கொடி கட்டி பறந்தார். பின்னர் சின்னத்திரையிலும் பல்வேறு சீரியல்களில் நடித்தார். இவரது தந்தை எம்.ஆர்.ராதா, சகோதரர் ராதாரவி, சகோதரி நிரோஷா ஆகியோரும் திரைத்துறை பிரபலங்களே.
இதையும் படியுங்கள்: கோலிவுட் வதந்தி: சென்னையில் பிரபல தியேட்டரை வாங்கினாரா நயன்தாரா?
ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட தமிழின் முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்த ராதிகா, கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமாரை திருமணம் செய்துக் கொண்டார். தற்போதும் வெள்ளித்திரை, சின்னத்திரை என பிசியாக நடித்து வருகிறார்.
இந்தநிலையில், நடிகை ராதிகாவின் சிறுவயது முதல் தற்போது வரையிலான புகைப்படங்களின் தொகுப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் நடிகை ராதிகா குழந்தையாக இருந்தது முதல் பல்வேறு காலக் கட்டங்களில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்களாகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil