/tamil-ie/media/media_files/uploads/2023/05/Radika.jpg)
நடிகை ராதிகா சரத்குமார்
சந்திரமுகி 2 படத்தில் நடித்து வரும் ராதிகா சரத்குமாருக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் தங்க மோதிரம் மற்றும் விலையுயர்ந்த வாட்ச் பரிசளித்துள்ளார். இதனை நெகிழ்ச்சியுடன் ராதிகா சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
1978 இல் கிழக்கே போகும் ரயில் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராதிகா. பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து கொடி கட்டி பறந்தார். பின்னர் சின்னத்திரையிலும் பல்வேறு சீரியல்களில் நடித்தார். இவரது தந்தை எம்.ஆர்.ராதா, சகோதரர் ராதாரவி, சகோதரி நிரோஷா ஆகியோரும் திரைத்துறை பிரபலங்களே.
இதையும் படியுங்கள்: நிறைமாத கர்ப்பிணி நக்ஷத்திராவுக்கு சீரியல் நடிகை டார்ச்சர்: தோழியா இருந்தாலும் இது ஓவரு!
ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட தமிழின் முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்தவர் ராதிகா. 80, 90களில் ஹீரோயினாக கொடிகட்டி பறந்தவர், தற்போது குணச்சித்திர வேடங்களிலும் கலக்கி வருகிறார். இதற்கிடையில் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமாரை திருமணம் செய்துக் கொண்டார். தற்போதும் வெள்ளித்திரை, சின்னத்திரை என பிசியாக நடித்து வருகிறார்.
இந்தநிலையில், பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படத்தில் நடித்து வரும் ராதிகாவுக்கு, அந்த படத்தின் நடிகர் ராகவா லாரன்ஸ் தங்க மோதிரம் மற்றும் விலையுயர்ந்த கைகடிகாரம் ஒன்றை பரிசளித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ராதிகா, ”லைகா புரொடக்ஷனில் சந்திரமுகி 2 படத்தில் நடிப்பது மகிழ்ச்சி. பி.வாசு போன்ற ஒரு இயக்குனருடன் அவரது கைவினை மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் பணிபுரிவது எவ்வளவு மகிழ்ச்சி அளிக்கிறது. மற்றும் ராகவா லாரன்ஸூக்கு நன்றி, எனக்கு ஒரு தங்க மோதிரம் மற்றும் விலையுயர்ந்த கடிகாரம் பரிசளித்த முதல் ஹீரோ இவர், உண்மையான பாசம்,” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
It’s a wrap #chandramukhi2@LycaProductions wht a joy working with a director so thorough with his craft and vision #pvasu 🙏 and thank you to this gem @offl_Lawrence who is the first hero who gifted me a gold ring and expensive watch, genuine affection ❤️❤️❤️❤️ pic.twitter.com/9WlBRBuKqH
— Radikaa Sarathkumar (@realradikaa) May 28, 2023
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.