ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் இயக்குநர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்துகொண்டு பேசினார்.
அதில் பேசிய லாரன்ஸ், "எனக்கு அரசியல் தெரியாது. ஆனால் என்னை சீண்டி அரசியல் கத்துக்க வெச்சுடாதீங்க. ரஜினியை யார் தவறாக பேசினாலும் நான் அதற்கு பதில் சொல்வேன்.
தர்பார் இசை வெளியீட்டு விழா லைவ் அப்டேட்ஸ் காண
2017ல் 'நான் அரசியலுக்கு வருவது உறுதி' என்று சொல்லும் போது கூட, அந்த மேடையில் ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லி மற்றவர்களை புகழ்கிறார். மு.க.ஸ்டாலின் தொடங்கி எனக்கு அவர் பெயர் சொல்ல பிடிக்கல(சீமான்) அவர் வரை அனைவரையும் புகழ்ந்துள்ளார்.
முரசொலியில் ரஜினியைப்பற்றி தவறாக எழுதினார்கள். பின்னர் வருத்தம் தெரிவித்தனர். அதற்கு மு.க.ஸ்டாலின் பயந்து விட்டார் என்று அர்த்தமல்ல. அது ரஜினி அவர்கள் மீதுள்ள மரியாதை.
7, 2019
தலைவருக்கு அரசியல் தெரியாதுன்னு சொல்றாங்க... அது வந்த பிறகு தெரியும். தலைவர் 96லயே அரசியலுக்கு வந்திருக்கணும் சொல்றாங்க. வந்த பதவியை வேண்டாம்-னு சொன்ன தலைவரை எங்கயாவது பார்த்து இருக்கீங்களா?. அவருக்கு அப்போ விருப்பம் இல்ல.
ஆனால், இந்த வயசுல அவருக்கு பணம் வேண்டுமா, புகழ் வேண்டுமா? மோடியே அவர் வீட்டுக்கு வந்து பார்த்துட்டு போறார். படத்தின் பப்ளிசிட்டிக்காக அவர் பேசுகிறார் என்கிறார்கள். டேய்... பப்ளிசிட்டிக்கு பேரே சூப்பர் ஸ்டார் தான்டா.
நான் இந்த மேடையில் இப்படி பேசினத்துக்கு ரஜினி என்னிடம் பேசாமல் போனாகூட பரவாயில்லை. ஆனால் அவர் பேச்சு நாட்டுக்கு நல்லதல்ல" என்று பற்ற வைத்திருக்கிறார் ராகவா லாரன்ஸ்.