சீனாவில் ரிலீஸாகும் ரஜினிகாந்தின் 2.0!

அதிகளவு ஸ்கிரீன்களில் சீனாவில் வெளியாகும் முதல் படம், என்ற பெருமையை 2.0 பெரும். 

அதிகளவு ஸ்கிரீன்களில் சீனாவில் வெளியாகும் முதல் படம், என்ற பெருமையை 2.0 பெரும். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rajinikanth's 2.0 to releases in China

2.0 Releases in China: நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியான 2.0 திரைப்படம் தான் 2018-ல் அதிக பொருட்செலவில் தயாரிக்கப் பட்ட படம்.

Advertisment

தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இந்தப் படம் தற்போது சீனாவில் மாயாஜாலம் நிகழ்த்தவிருக்கிறது.

Thalapathy 63: தளபதி 63-யில் விஜய் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்!

ஆம்! இந்தப் படம் 2.0 என்ற பெயரிலேயே, தற்போது சீனாவில் ரிலீஸாகவிருப்பதாக, சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் சீனாவில் 50,000 ஸ்கிரீன்களில் வெளியாகிறதாம்.

Advertisment
Advertisements

படம் வெளியாவது குறித்து சில தினங்களுக்கு முன்பு போஸ்டர் ஒன்று லீக்காகி இணையத்தில் வைரலானது. அதன்படி, ஜூலை 12-ம் தேதி சீனாவில் வெளியாகிறதாம் 2.0

2.0 to releases in China

ஒருவேளை இது உண்மையாகும் பட்சத்தில் ரஜினியின் நடிப்பில் அதிகளவு ஸ்கிரீன்களில் சீனாவில் வெளியாகும் முதல் படம், என்ற பெருமையை 2.0 பெரும்.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Rajini Kanth Akshay Kumar Shankar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: