/tamil-ie/media/media_files/uploads/2020/02/ERw761CX0AA0TQc-horz.jpg)
Rajinikanth, into the wild with bear grylls
Rajinikanth Debut television show into the wild : மார்ச் மாதம் 23ம் தேதி ஒளிபரப்பாகிறது ரஜினிகாந்த் மற்றும் பியர் க்ரில்ஸின் இன் டூ தி வைல்ட் நிகழ்ச்சி. உலக அளவில் பிரபலமான மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் பங்கேற்கும் சாகச வீரர் பியர் க்ரில்ஸ் கடந்த ஆண்டு மோடியுடன் இணைந்து இது போன்ற சாகச நிகழ்வு ஒன்றினை நிகழ்த்தினார்.
ரஜினிகாந்துடன் கர்நாடக வனப்பகுதியில் இந்த சிறப்பு நிகழ்வுக்கான காட்சிகள் படமாக்கப்பட்டது. டிஸ்கவரி சேனல் தற்போது வெளியிட்டிருக்கும் ட்விட்டர் அறிவிப்பின் படி, இந்த நிகழ்ச்சி முதன்முறையாக டிஸ்கவரி சேனலில் வருகின்ற மார்ச் 23ம் தேதி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இன்டூ தி வைல்ட் என்ற பெயரில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி ரஜினிகாந்தின் டெலிவிசன் டெப்யூட் ஆகும்.
Gear up to venture into the wilderness of India with survival expert @BearGrylls and the ultimate superstar @Rajinikanth in an action packed adventure. Premieres 23 March at 8 PM, only on Discovery #ThalaivaOnDiscoverypic.twitter.com/zSS4GsSCL4
— Discovery Channel IN (@DiscoveryIN) February 27, 2020
இதற்கு முன்பு பியர் க்ரில்ஸ் ரஜினிகாந்துடன் அவர் பணியாற்றியது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். உலகின் பல்வேறு பகுதியில் வசிக்கும் பிரபலமான மனிதர்களுடன் நான் பணியாற்றி இருக்கின்றேன். ஆனால் ரஜினிகாந்துடன் பணியாற்றியது மிகவும் சிறப்பு வாய்ந்தது கூறியிருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.