சூப்பர் ஸ்டார் பட்டம் பற்றிய சர்ச்சை நீடிக்கும் சூழலில் ஜெயிலர் படத்தின் 'ஹுக்கும்' பாடல் வரிகளை ரஜினி ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் ஜெயிலர். இந்தப் படத்தில் தமன்னா, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இதையும் படியுங்கள்: உன் அலும்ப பார்த்தவன்… உங்கப்பன் விசில கேட்டவன்; ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் ‘ஹூக்கும்’ பாடல் வெளியீடு
அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில், முதல் சிங்கிளான காவாலா வெளியாகி இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்தநிலையில் படத்தின் இரண்டாம் பாடலாக ஹூக்கும் என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடல் ரஜினியின் சூப்பர் ஸ்டார் இமேஜை நிலைநிறுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதனையடுத்து இந்தப் பாடலின் வரிகளை ரஜினி ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
ஏனென்றால், சமீபகாலமாக சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சை நிலவி வருகிறது. ஒரு திரைப்பட விழாவில் சினிமா விமர்சகர் ஒருவர் ரஜினியை முன்னாள் சூப்பர் ஸ்டார் என்று கூறியது சர்ச்சையை கிளப்பியது.
இந்தநிலையில், "பெயர தூக்க நாலு பேரு, பட்டத்த பறிக்க நூறு பேரு, குட்டிச்செவத்த எட்டி பாத்தா, உசுர கொடுக்க கோடி பேரு" என்ற வரிகள் இடம் பெற்ற ஹூக்கும் பாடலை சூப்பர் ஸ்டார் பட்டம் சர்ச்சைக்கு பதிலடியாக ரஜினி ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
ஹூக்கும் முழு பாடலின் வரிகள் இதோ…
அலப்பறை கிளப்புறோம்.. **தா பாரு டா
கலவரம் எறங்குனா **தா டாரு டா
நிலவரம் புரியுதா.. உக்காருடா..
தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாரு டா..
வரமொற ஒடச்சிட்டா செட் ஆனவன், தலைமுறை கடக்குற ஹிட் ஆனவன்,
எளியவன் மனசுல ஃபிட் ஆனவன்,
முடிவுல ஜெயிச்சுட உரித்தானவன்..
நடக்குற நடை புயலா..!
முடி ஒதுக்குற ஸ்டைலா..!
கனவில்லை இது ரியலாச்சே..!
தல முதல் அடி வரை தலைவரு அலப்பறை..!
பளபள பளக்குற வெயிலா!
அடி நூறுக்கு டயலா..!
செதுக்குற திரையென ஜெயிலாச்சே..!
சிறை முதல் திரை வரை தலைவரு அலப்பறை..!
அலப்பறை கிளப்புறோம்.. தலைவரு நிரந்தரம்..
உன் அலும்ப பார்த்தவன்.. உங்க அப்பன் விசில கேட்டவன்.. உன் மவனும், பேரனும் ஆட்டம் போட வைப்பவன்..
பேர தூக்க நாலு பேரு.. பட்டத்த பறிக்க நூறு பேரு.. குட்டி செவுத்த எட்டி பார்த்தா உசிரு கொடுக்க கோடி பேரு..
டைகர்கா ஹுக்கும்...
அலப்பறை கிளப்புறோம்.. தலைவரு நிரந்தரம்..
நீ எண்டு கார்டு வச்சா இவன் ட்ரெண்ட மாத்தி வைப்பான்..
நீ குழிய பறிச்சு வச்சா இவன் மலையில் ஏறி நிப்பான்...
சுத்தி அடிக்குற லத்திகிட்ட சிக்கினா, அட்டக்கத்தி எல்லாம் பொடிதான். கண்டபடி நீ கம்பு எடுத்து சுத்துனா, உச்ச தலையில இடிதான்...
நரையிருச்சுன்னு முறைச்சா, துரைகிட்ட வந்து கொலைச்சா, சிறையில் சிக்கி தொலையாதே.. ஒரசற வரையில உனக்கொரு கொறையில..
தொட நெருங்கிட முடியாதே, எது இழுக்கிது தெரியாதே, குள்ள நரிக்கிது புரியாதே..
விதிகளை திருப்புற.. தலைவரு அலைப்பற..
உன் அலும்ப பார்த்தவன்.. உங்க அப்பன் விசில கேட்டவன்.. உன் மவனும், பேரனும் ஆட்டம் போட வைப்பவன்..
பேர தூக்க நாலும் பேரு.. அத்தனை பட்டத்த பறிக்க நூறு பேரு.. குட்டி செவுத்த எட்டி பார்த்தா உசிரு கொடுக்க கோடி பேரு..
அலப்பறை கிளப்புறோம்.. தலைவரு நிரந்தரம்..
அலப்பறை கிளப்புறோம்.. தலைவரு நிரந்தரம்..
டைகர்கா ஹுக்கும்...
அர்த்தமாயிந்த ராஜா...
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil