Advertisment

உன் அலும்ப பார்த்தவன்… உங்கப்பன் விசில கேட்டவன்; ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் ‘ஹூக்கும்’ பாடல் வெளியீடு

’தலைமுற கடக்குற ஹிட்-ஆனவன்’; ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாடலான ‘ஹூக்கும்’ வெளியீடு; ரசிகர்கள் வரவேற்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rajinikanth Hukum

’தலைமுற கடக்குற ஹிட்-ஆனவன்’; ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாடலான ‘ஹூக்கும்’ வெளியீடு;

ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்ற 'ஹுக்கும்' பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அனிருத் இசையில் 'காவாலா' ஹிட்டானதை அடுத்து 'ஹுக்கும்' பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

காவாலா அதன் கவர்ச்சியான வரிகள் மற்றும் தமன்னா பாட்டியாவின் அற்புதமான நடன அசைவுகளுக்காக வைரலான பாடலாக மாறியுள்ளது. இந்தப் பாடல் யூடியூப்பில் பத்து நாட்களில் 44 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையில் இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ‘ஹுக்கும் டைகர் கா ஹூக்கும்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் பாடல் ரஜினிகாந்தின் ஸ்டைலான பாடலாக உள்ளது.

இதையும் படியுங்கள்: ரஜினிகாந்த் படம் வெளியாவதில் சிக்கல்? ’ஜெயிலர்’ டைட்டிலுக்கு முதல் உரிமை கோரும் மலையாள இயக்குனர்

சூப்பர் சுபுவால் எழுதப்பட்ட, ஹுக்கும் என்பது ரஜினிகாந்தின் எவர்கிரீன் ஸ்டைல் பற்றியது, இது தலைமுறைகளுக்குப் பொருத்தமானது. இந்தப் பாடலுக்கு அனிருத்தும் குரல் கொடுத்துள்ளார்.

‘உங்கப்பன் விசில் ஆ கேட்டவன்’ மற்றும் ’தலைமுற கடக்குற ஹிட்-ஆனவன்’ போன்ற வரிகள் ரஜினிகாந்தைப் பற்றியது. இருப்பினும், பாடலின் சிறப்பம்சமே ஆரம்பத்தில் ஒலித்த ரஜினிகாந்தின் உரையாடல் தான். திமிர்பிடித்த மற்றும் தைரியமாக ஒலிக்கும் ரஜினிகாந்தின் கதாபாத்திரத்தின் எச்சரிக்கை இது. “ஏய், இங்கே நான் தான் கிங், நான் வச்சது தான் ரூல்ஸ். அந்த ரூல்ஸ அப்பப்ப என் இஷ்டத்துக்கு மாத்திக்கிட்டே இருப்பேன். அத கப் சிப்னு கேட்டு ஃபாலோ பண்ணனும். அத விட்டுட்டு எதாவது அடாவடித்தனம் பண்ணனும்னு நினைச்ச, உன்ன கண்டம் துண்டமா வெட்டி கலைச்சி போட்டுருவேன். ஹும்... டைகர் கா ஹூக்கும்.

ரஜினியின் ஜெயிலர் ஹுக்கும் படத்தின் பாடல் இதோ:

ஜெயிலர் திரைப்படம் சிறைக் காவலர் ஒருவரைப் பற்றியது, சிறைக்குள் படப்பிடிப்பை நடத்தும் படக்குழுவினரை கைதிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதுதான் ஜெயிலர் படத்தின் கதை என்று கூறப்படுகிறது. இந்த கதை இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் கடைசி படமான பீஸ்ட், போல் உள்ளது. அந்தப் படத்தில் மாலுக்குள் தீவிரவாதிகளிடம் மாட்டிக்கொள்ளும் மக்களை ஹீரோ காப்பாற்றுவார். இருப்பினும், கதைப் பற்றி தயாரிப்பாளர்கள் வாய் திறக்கவில்லை.

ரஜினிகாந்த் மற்றும் தமன்னாவைத் தவிர, இந்தியத் திரையுலகின் மிகப் பெரிய ஸ்டார்களும் இந்தப் படத்தில் உள்ளனர். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோரும் நட்சத்திரக் குழுவில் உள்ளனர். சுனில், ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ஜெயிலர் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Rajinikanth Anirudh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment