Rajinikanth: சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் மாஸ்க் அணிந்தபடி கார் ஓட்டும் புகைப்படமும், மகள் சவுந்தர்யா, மருமகன் மற்றும் பேரனுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலானது.
‘அமேசான் பிரைம் டே’ ஆஃபர் வந்தாச்சு… வரிசைகட்டும் புது மாடல் ஸ்மார்ட்போன்கள்
இதைப் பார்த்த சிலரோ, ஊரடங்கு காலகட்டத்தில் இ-பாஸ் பெற்று தான் சென்னையிலிருந்து செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு ரஜினி சென்றாரா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், ரஜினிகாந்த் இ-பாஸ் பெற்றாரா என ஆய்வு செய்து பின்னர் தெரிவிக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இதனிடையே மருத்துவ தேவைகளுக்காக கேளம்பாக்கம் செல்வதாக ரஜினிகாந்த் இ-பாஸ் பெற்றதாக தகவல் வெளியானது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 26-ம் தேதி சென்னையிலிருந்து செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு ரஜினிகாந்த் காரில் சென்றபோது அவர் சீட் பெல்ட் அணியவில்லை என்று கூறி, சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளதாக ரசீது ஒன்று வெளியாகியுள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி: பாரம்பரிய ரசத்தை அடிச்சுக்க முடியாது
அதில், ரஜினிகாந்த் சென்ற வாகனத்தின் எண், விதிமீறியதாக அவரது பெயர் உள்ளிட்ட தகவல்களும், வி.என்.பழனி என்ற போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ரஜினிகாந்த் சீட் பெல்ட் அணியாத விதி மீறலுக்காக ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு அபராத தொகை 23.7.2020 அன்று செலுத்தப்பட்டிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#ரஜினி என்றாலே ஏன் சிலருக்கு இவ்வளவு வெறுப்பு ?
சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியதால் 100 ரூபாய் அபராதம் கட்டவில்லை என புகார்
சம்பவம் நடந்தது கடந்த மாதம் 26ம் தேதி. அவரின் ஓட்டுநர் எடுத்து சென்ற போது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அப்போது #ரஜினி காரில் இல்லை என்பது தான் உண்மை.
— Stalin SP (@Stalin__SP) July 24, 2020
ஆனால் அந்த வாகனத்தை கடந்த மாதம் ரஜினியின் ஓட்டுநர் ஓட்டிய போது இந்த சம்பவம் நடந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும், ரசீது ரஜினி பெயரில் போடப்பட்டுள்ளது.
இது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அப்படியான சில ட்வீட்களை இங்கே பதிவிடுகிறோம்.
நடிகர் #ரஜினிகாந்த் சீட்பெல்ட் அணியாமல் காரில் சென்றதால் போலீசார் 100 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.#Rajinikanth pic.twitter.com/vfJ30D6fEH
— Abinesh Arjunan (@The_Abinesh) July 24, 2020
பச்சை தமிழனுக்கு,
Seat Belt அணியாமல் செல்ல கூட அனுமதி இல்லையா..?
"சிஸ்டமே சரியில்லை"
— Rajinikanth (@RajiniOffl) July 24, 2020
ஒரு மாதம் ஆன பின்பும் அபராதம் கட்டவில்லை... ரஜினியோ... ரஜினி ட்ரைவரோ.... பணம் இல்லையா.... இல்ல அலட்சியமா??
— தெற்கிலிருந்து ஒரு சூரியன் (@AdhavanMurasu) July 25, 2020
மன்னிப்பு கேட்பதும் அபராதம் கட்டுவதும் #சங்கிகள் ரத்தத்தில் ஊறியது தானே @rajinikanth #ரஜினிகாந்த் pic.twitter.com/tiRjb6dkE3
— பெரியாரியலாளர். துரை (@ArjunanDurai) July 24, 2020
சீட் பெல்ட் போடாத #ரஜினிகாந்த் அவர்களுக்கு ரூ100 அபராதம் போட்ட சென்னை போலீஸ்-செய்தி
சீட் பெல்ட் போடாதவர்களுக்கு ரூ1000 அபராதம் & 3மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என திருத்தி அமைக்கப்பட்ட வாகன சட்டம் கூறும் நிலையில், இவருக்கு மட்டும் ரூ.100, சிஸ்டம் சரியில்ல தான்.
— பெரியாரியலாளர். துரை (@ArjunanDurai) July 25, 2020
@chennaicorp திருமணத்திற்கு கொளத்தூர்-தி.நகர் செல்வதற்கு ஈபாஸ் கேட்டபோது, எனது பெயர் திருமண பத்திரிக்கையில் இல்லை என நிராகரித்தீர்களே, தற்மோது @rajinikanth அவர்களுக்கு மருத்துவ அவசரம் என்பதற்காக கொடுத்திருக்கீங்களே, எப்படி சார்? யாருக்கு உடல்நலம் சரியில்லை விளக்க முடியுமா? 1/3 pic.twitter.com/ptz7QoKoMa
— Balamurugan (@ibalamurugan72) July 23, 2020
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.