Advertisment

ரஜினிகாந்த் பயணம் செய்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

விமானத்தில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறு உரிய நேரத்தில் கண்டறியப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rajinikanth, flight made emergency landing at chennai

ரஜினிகாந்த்

Rajinikanth: சென்னையிலிருந்து மைசூருக்கு புறப்பட்டுச் சென்ற சிறிய ரக விமானம், சிறிது நேரத்தில் மீண்டும் சென்னை விமான நிலையத்திலேயே தரை இறங்கியது. இதில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட 48 பேர் பயணித்தனர்.

Advertisment

இவரே கத்துவாராம் ; இவரே உஷ்ஷ்னு சொல்லுவாராம் : விஜய்யின் மாஸ்டர் புதிய லுக் ரிலீஸ்

கர்நாடக மாநிலம் பந்திப்பூரில் இன்று நடக்கும் மத்திய அரசின் விழாவில் கலந்து கொள்ள உள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இதற்காக சென்னையில் இருந்து மைசூருக்கு விமானத்தில் இன்று காலை புறப்பட்டார். புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து 48 பயணிகளுடன் சென்னையில் இருந்த மைசூருக்கு புறப்பட்ட விமானம் அவசரமாக மீண்டும் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறு உரிய நேரத்தில் கண்டறியப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் அந்த விமானம் சிறிய ரக ’ட்ரூஜெட்’ விமானம் என சொல்லப்படுகிறது.

13 வயது மகளுடன் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிரபல கூடைப்பந்து வீரர்!

தற்போது விமானத்தின் கோளாறு சரி செய்யப்படுவதால் பயணிகள் அனைவரும் சென்னை விமான நிலையத்தில் 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்கின்றனர்.

Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment