ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் இடம்பெறும் காவாலா பாடல், எம்.ஜி.ஆர் பாடல் ஒன்றிலிருந்து காப்பியடிக்கப்பட்டுள்ளது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ஜெயிலர். கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் மோகன் லால், தமன்னா, சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி, பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்: கடந்த ஆறு மாதங்கள் “கடினமானவை”; சிகிச்சையில் இருக்கும் சமந்தா உருக்கமான பதிவு
இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘காவாலா’ பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் பாடலில் தமன்னாவின் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தாறுமாறாக ஆடிய தமன்னாவின் ஆட்டத்தை ரசிகர்கள் ரிபீட் மோடில் பார்த்து வருகின்றனர். மேலும், எப்போதும் போல் ரஜினியின் ஸ்டைலான தோற்றம் ரசிகர்களை பாடலை திரும்ப திரும்ப பார்க்க வைக்கிறது. இதனால் இந்தப் பாடல் இணைய தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
இந்நிலையில் இப்பாடல் காப்பி என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. அனிருத் இசையில் பாடல்கள் வெளியானால், கூடவே காப்பி என்ற சர்ச்சையும் அதனுடன் சேர்ந்தே வரும். அந்த வகையில் காவாலா பாடல், எம்.ஜி.ஆர் பாடல் ஒன்றிலிருந்து காப்பியடிக்க பட்டுள்ளது என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும், இதுதொடர்பான வீடியோ ஒன்றையும் நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil