நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினியின் மாஸான கமர்ஷியல் படம் பார்த்த திருப்தி; ஜெயிலர் விமர்சனம்

பல திருப்பங்கள் அதிகப்படியான ஆக்சன் காட்சிகள் என ஒரு முழு கமர்சியல் விருந்தை கொடுத்திருக்கிறார் நெல்சன்; ஜெயிலர் திரை விமர்சனம்

பல திருப்பங்கள் அதிகப்படியான ஆக்சன் காட்சிகள் என ஒரு முழு கமர்சியல் விருந்தை கொடுத்திருக்கிறார் நெல்சன்; ஜெயிலர் திரை விமர்சனம்

author-image
WebDesk
New Update
Jailer Rajinikanth

ஜெயிலர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "ஜெயிலர்" படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கும், கொண்டாட்டங்களுக்கும் இடையே பிரம்மாண்டமாக இன்று (ஆகஸ்ட் 10) உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது இந்த படம் ரசிகர்களை கவர்ந்ததா? என்பதை இந்த விமர்சனத்தில் காணலாம்.

Advertisment

இதையும் படியுங்கள்: Jailer movie review: கர்நாடகாவிற்கு KGF; ஆந்திராவிற்கு பாகுபலி; தமிழ்நாட்டிற்கு ஜெயிலர்… பான் இந்தியா ஹிட்!

கதைக்களம்

ரிட்டையர்டு போலீஸ் அதிகாரியான ரஜினியின் மகனாக வரும் வசந்த் ரவி சிலை கடத்தல் மன்னனான விநாயகத்தின் சிலைகளை பறிமுதல் செய்கிறார். இதன் காரணமாக அவரை வில்லன் குரூப் கடத்தி விடுகிறது. இதனால் வசந்த் ரவியின் குடும்பத்திற்கும் ஆபத்து ஏற்படுகிறது. இதை ரஜினி எப்படி சமாளித்தார்? என்பதை பல திருப்பங்களுடன் சொல்லும் கதை தான் இந்த ஜெயிலர்.

Advertisment
Advertisements

ரஜினிகாந்த்

படம் முழுக்க ரஜினியின் ராஜ்ஜியம் என்று தான் சொல்ல வேண்டும். அவர் வரும் ஒவ்வொரு காட்சிகளிலும் ரசிகர்களை வெறித்தனமாக கட்டி போடுகிறார். அவருடைய எனர்ஜி, ஆக்டிங், நடனம், சண்டை என அனைத்துமே ரசிகர்கள் கொண்டாடும் விதமாக அமைந்திருக்கிறது. வயசானாலும் சூப்பர் ஸ்டார், சூப்பர் ஸ்டார் தான் என்பதை மீண்டும் ஒருமுறை இப்படத்தில் நிரூபித்து இருக்கிறார்.

மற்ற நடிகர்களின் நடிப்பு

வில்லனாக விநாயகம் மிரட்டி இருக்கிறார், அவருடைய வில்லத்தனம் பல இடங்களில் நம்மை பயமுறுத்துகிறது. மேலும் மோகன்லால், சிவராஜ்குமாரின் கேமியோ படத்தின் மாஸை மேலும் உயர்த்தி இருக்கிறது. யோகி பாபுவின் காமெடிகள் பல இடங்களில் கலக்கியிருக்கிறது. மேலும் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, ரெடின், வி.டி.வி கணேஷ் ஆகியோரும் தங்களுடைய கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர்.

இயக்கம் மற்றும் இசை

தன்னுடைய வழக்கமான ஆக்சன், பிளாக் காமெடி பாணியையே மீண்டும் கையில் எடுத்திருக்கிறார் நெல்சன். ஆனால் இந்த முறை திரைக்கதையில் சிறப்பாக உழைத்திருக்கிறார். படம் தொடங்கியது முதல் முடியும் வரை விறுவிறுப்பாக திரைக்கதை அமைத்திருப்பதே அவரின் வெற்றியாக நாம் பார்க்கலாம். அனிருத் இசையில் பாடல்கள் ஏற்கனவே மெகா ஹிட் அடித்திருந்தாலும் இப்படத்தின் பின்னணி இசை அதைவிட பல மடங்கு வெறித்தனமாக அமைந்திருக்கிறது.

படம் எப்படி?

முதல் பாதியின் காட்சிகள் கலக்கலாகவும், காமெடியாகவும், அதிரடியாகவும் அதே சமயம் கதை களத்திலிருந்து விலகாத அளவுக்கு நேர்த்தியாக அமைந்திருக்கிறது. இரண்டாம் பாதியிலும் பல திருப்பங்கள் அதிகப்படியான ஆக்சன் காட்சிகள் என ஒரு முழு கமர்சியல் விருந்தை கொடுத்திருக்கிறார் நெல்சன். படத்தில் சில குறைகள் ஆங்காங்கே தென்பட்டாலும் அவை பெரிய அளவில் நமது கவனத்தை ஈர்க்கவில்லை.

மொத்தத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு தரமான ரஜினியின் கமர்சியல் படத்தை பார்த்த திருப்தியை கொடுத்திருக்கிறது இந்த ஜெயிலர்.

விமர்சனம்: நவீன் சரவணன்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Rajinikanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: