Advertisment

Kaala movie: குமாரசாமியை சந்தித்த கமல்ஹாசன், ‘காலா’ பற்றி பேசவில்லை

Kaala movie LIVE UPDATES: ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் கேங்ஸ்டர் ஸ்டோரியான காலா திரைப்படம் தொடர்பான லைவ் அப்டேட் செய்திகள் இங்கே!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rajinikanth, Kaala movie LIVE UPDATES

Rajinikanth, Kaala movie LIVE UPDATES

Kaala movie LIVE UPDATES: காலா... ரஜினிகாந்த் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளை சுமந்திருக்கும் படம்! ஜூன் 7-ம் தேதி படம் ரிலீஸை அரசியல் உலகமும் உற்று நோக்குகிறது.

Advertisment

Kaala movie LIVE UPDATES: ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவிருக்கும் காலா படம் குறித்து வி.ஐ.பி.க்கள், திரைப் பிரபலங்கள் கருத்துகளை அறிய ‘ஐஇ தமிழ்’ லைவ் அப்டேட்-டில் இணைந்திருங்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகியிருக்கும் காலா திரைப்படம், ஜூன் 7-ம் தேதி திரைகளை தொடுகிறது. கபாலி இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நானா படேகர், சமுத்திரக்கனி, அருள்தாஸ், ஈஸ்வரி ராவ், ஹூமா குரேஷி, அஞ்சலி பட்டீல் ஆகியோரும் இதில் மின்னுகிறார்கள்.

காலா படத்தின் ஆடியோ வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த், ‘கபாலி, ரஞ்சித்தின் படமாக இருந்தது. ஆனால் காலா, ரஞ்சித் படமாகவும் எனது படமாகவும் இருக்கவேண்டும் என ரஞ்சித்திடம் சொன்னேன். காலாவில் அரசியல் உண்டு. ஆனால் இது அரசியல் படம் அல்ல. தாராவி மக்களின் வாழ்வை படமாக்க ரஞ்சித்திடன் பரிந்துரைத்தது நான்தான்.’ என்றார்.

Kaala movie LIVE UPDATES: ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் கேங்ஸ்டர் ஸ்டோரியான காலா திரைப்படம் தொடர்பான லைவ் அப்டேட் செய்திகள் இங்கே!

2:50 PM : கர்நாடகாவுக்கு சென்று காவிரி பிரச்னை குறித்து முதல்வர் குமாரசாமியிடம் இன்று பேசினார், மக்கள் நீதி மய்யம் தலைவரான கமல்ஹாசன். காலா ரிலீஸ் சிக்கல் குறித்து பேசினீர்களா? என நிருபர்கள் கேட்டபோது, ‘காலா பற்றி பேசவில்லை. அது தேவையுமில்லை’ என்றார் கமல்ஹாசன்.

1:30 PM : ‘காலாவை திரையிடுவதில் பாதுகாப்பு பிரச்னைதான். அதனால்தான் நாங்களாகவே முன் வந்து படத்தை திரையிடுவதில்லை என முடிவெடுத்தோம். ஏதாவது ஆச்சர்யம் நிகழ்ந்து, குமரண்ணா (முதல்வர் குமாரசாமி) தலையிட்டு பிரச்னையை தீர்த்தால், கர்நாடகாவில் காலா ரிலீஸ் ஆகலாம்’ என்றார், கர்நாடகா காட்சி அமைப்பாளர்கள் சங்க செயலாளர் நரசிம்மலு.

1:00 PM : காலா படம் கர்நாடகாவில் ரிலீஸ் ஆகாவிட்டால், கர்நாடக சினிமா வர்த்தகத்திற்கு நாளொன்றுக்கு சராசரியாக 30 கோடி முதல் 35 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என அந்தத் துறை சார்ந்தவர்கள் கூறுகின்றனர்.

12:20 PM : காலாவுக்கு புதிதாக மிரட்ட வந்திருக்கிறது. மும்பையில் பணியாற்றும் பத்திரிகையாளர் ஒருவர், தனது தந்தை திரவியம் நாடாரை அடிப்படையாக வைத்து அவரை அவதூறு செய்யும் விதத்தில் காலா படம் எடுக்கப்பட்டிருப்பதாகவும், பட நிறுவனம் மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடரவிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

To See, காலா நீங்கள் பார்த்திராத வண்ணத்தில் .... ஃபோட்டோ கேலரி Click Here

12:10 PM :காலா ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம் இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம்-க்கு அளித்த பேட்டியில், ‘முடிந்த அளவுக்கு தாராவியை இயல்பாக உருவாக்கி படப்பிடிப்பு நடத்தினோம். சுவர்களுக்காக தடிமனான சிமெண்ட் ஷீட்களை பயன்படுத்தினோம்’ என்றார்.

To Read, “காலா” யாருக்கான படம்? மனம் திறக்கிறார் பா. இரஞ்சித்! Click Here

11:15 AM : காலா குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் கூறியது... ‘காலா, கமர்ஷியல் படம். ஆனால் மக்கள் பிரச்னைகளை இது பேசும். ரஜினி சாரின் வாய்ஸ் இதில் பவர்ஃபுல்லாக இருக்கிறது’

11:00 AM : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று ஹைதராபாத் செல்கிறார். காலா வெளியீடு தொடர்பான பிரஸ் மீட்டில் கலந்து கொள்கிறார். அவருடன் அவரது மருமகனும், படத் தயாரிப்பாளரான நடிகர் தனுஷும் செல்கிறார்.

10:30 AM: காலா ஜூன் 7-ம் தேதி வெளியாகிறது. தியேட்டர் புக்கிங் இன்று(ஜூன் 4) தொடங்கியது.

10:00 AM: காவிரி பிரச்னையில் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து காரணமாக கர்நாடகாவில் காலா படத்திற்கு திரைப்பட வர்த்தக சபை தடை விதித்திருப்பதாக தகவல்கள் வந்தன. இது குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து கூறுகையில், ‘காவிரி பிரச்னையில் காலா என்ன செய்தது? ஏன் எப்போதும் பட உலகை டார்கெட் செய்கிறீர்கள்? சட்டம் ஒழுங்கை பிரிவினை சக்திகள் கைகளில் எடுக்க ம.ஜ.த-காங்கிரஸ் அரசு அனுமதிக்கப் போகிறதா? பத்மாவாத் பட விவகாரத்தில் பாஜக செய்ததைப் போல! அல்லது சாதாரண மனிதன் தனது தேர்வை தேர்வு செய்யும் உரிமையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமா?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார் பிரகாஷ்ராஜ்.

 

Rajinikanth Kaala Kuttyweb
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment