Rajinikanth Press Meet Photos : சென்னை லீலா பேலஸில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த். அரசியல் பிரவேசம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. அவரின் படத் தொகுப்பு இதோ...
லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் அமலாபால்? : வைரலாகும் படங்கள்
"கடந்த முறை நடந்த சந்திப்பில் ஒரு விஷயத்தில் எனக்கு ஏமாற்றம் அளித்தது எனக் கூறியிருந்தேன். ஆனால் அதைப்பற்றி மாவட்ட நிர்வாகிகள் யாரும் வெளியில் சொல்லவில்லை. அவர்களுக்கு எனது பாராட்டுகள்"
நான் 2017-ல் தான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னேன். ஆனால் 96-ல் நான் அது குறித்து சொல்லவில்லை”
2 பெரிய ஆளுமைகள் இல்லாம இங்க வெற்றிடம் உருவாகியிருக்கு. இதான் சரியான நேரம், 54 வருஷமா நடந்திட்டு இருக்க ஆட்சியை அகற்ற இதுதான் நமக்கு சரியான நேரம்.
தற்போது சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் எலலொரும் 50 வயதுக்கு மேலானவர்களே. 60 முதல் 65 சதவீதம் எனது கட்சியில் 50 வயதுக்கு கீழுள்ளோரை வாய்ப்பு கொடுப்பேன்.
30 முதல் 35% மாற்றுக்கட்சியிலிருந்து வாய்ப்பு இல்லாமல் இருப்பவர்களுக்கு வாய்ப்பு தருவேன்.
ஓய்வுபெற்ற நீதிபதிள் உள்ளிட்டோரை நானே நேரடியாக அவரகள் இல்லம் சென்று சிஸ்டத்தை சரிசெய்ய அழைப்பேன்.
கட்சி வேறு, ஆட்சி வேறு என்ற அடிப்படையில் தலைமையை நிர்ணயிப்பேன். எனக்கு ஆட்சி தலைமை தேவையில்லை.
இதுவரை நான் முதலைமைச்சர் பதவியை நினைத்து பார்த்ததேயில்லை. நான் கட்சித்தலைவராகவே இருந்து நல்ல இளைஞனை ஆட்சிக்கு தலைவனாக தேர்ந்தெடுப்பேன்
எம்.எல்.ஏ, எம்.பியாக ஒருவரை ஆக்கி "அழகு பார்ப்பது என்பது அரசியலில் எனக்கு பிடிக்காத வார்த்தை".
அரசியலில் பணம், பதவி, பெயருக்கு நான் வரவில்லை என 2017 டிசம்பரிலேயே கூறிவிட்டேன். நல்ல தலைவர்களை உண்டாக்குபவர்களே நல்ல தலைவர்கள்.
மேலே குறிப்பிட்டவாறு இன்று நடந்த பிரஸ் மீட்டில் கூறினார் நடிகர் ரஜினிகாந்த்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”