ரஜினி படத்திற்கு இப்படியொரு சோகமா? யாருகிட்ட அடி வாங்குது பாருங்க!

டி.ஆர்.பி. ரேட்டிங்கில், தர்பார் திரைப்படம் 90 லட்ச புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

பிரபல டி.வி சேனலில், ஆகஸ்ட் 15ம்  சுதந்திர தினத்தன்று இரண்டாவது முறையாக ஒளிபரப்பான  ‘தர்பார்’ திரைப்படத்தை ரசிகர்கள் விரும்பவில்லை என்ற அதிர்ச்சியான தகவல் டி.ஆர்.பி. ரேட்டிங் மூலம் தெரியவந்துள்ளது.

சமீபத்திய டி.ஆர்.பி. ரேட்டிங்கில், தர்பார் திரைப்படம் 90 லட்ச புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. விஜய் ஆண்டனி நடித்து வெளிவந்த ‘திமிரு பிடிச்சவன்’ படம் 122 லட்ச புள்ளிகளுடன் முதலிடம் பெற்றது. இத்திரைப்படத்தில் விஜய் ஆண்டனி மற்றும் நிவேதா பெத்துராஜ் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இந்த வருட பொங்கலுக்கு தர்பார் திரைப்படம் வெளியானது. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் நிவேதா தாமஸ், நயன்தாரா, சுனில் ஷெட்டி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.


 

இந்தப் படத்தின் செயற்கைக்கோள் உரிமைகளை சன் டிவி வாங்கியது.  முன்னதாக, தமிழ்ப் புத்தாண்டின் போது சன் டிவியில் தர்பார் திரைப்படம் ஒளிபரப்பானது. அப்போதும் இந்த படத்தை பொதுமக்கள் யாரும் பார்க்க முன்வரவில்லை. டி.ஆர்.பி. ரேட்டிங் காஞ்சனா 3-வை விட குறைவாகவே  கிடைத்தது.

இதற்கிடையே, தர்பார் திரைப்படத்தின் விநியோகஸ்தர்கள் தாங்கள் எதிர்பார்த்த வசூலை தர்பார் திரைப்படம் கொடுக்கவில்லை என்றும் இதனால் தங்களுக்கு ரூ.25 கோடி நஷ்டம் என்றும்  தெரிவித்திருந்தனர். இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி  நடித்து வரும் அடுத்த படத்தின் பெயர் அண்ணாத்த என்று பெயரிடப்பட்டுள்ளது.

காஞ்சனா, திமிரு பிடிச்சவன் போன்ற திரைப்படங்கள்  எத்தனை முறை ஒளிபரப்பப்பட்டாலும் நேயர்களை பெருமளவில் ஈர்த்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rajnikanth darbar movie sun tv custom viewership data

Next Story
வளைகாப்புக்குப் பிறகு க்யூட் டான்ஸ் ஆடிய மைனா நந்தினி; வீடியோactress myna nandhini, myna nandhini babyshower, myna nandhini cute dance video, viral video, மைனா நந்தினி, வளைகாப்பு, மைனா நந்தினி டான்ஸ், வைரல் வீடியோ, myna nandhini dance for kaattu payale song, soorarai pottru movie, vijay tv, sravanan meenatchi serial myna nandhini
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express