Rakul Preet Singh : நடிகை ராகுல் ப்ரீத் சிங் கடைசியாக தமிழில், செல்வராகவனின் என்.ஜி.கே படத்தில் நடித்திருந்தார். நடிகர் சூர்யா ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில் சூர்யா - ரகுல் இடம்பெற்ற ’அன்பே பேரன்பே’ பாடல் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் - இயக்குநர் ஷங்கரின் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ரகுல்.
Gypsy Review : பயணம், காதல், வாழ்க்கை, வலுவான அரசியல்!
இதற்கிடையில், தொழில்துறையில் ஃபிட்டாக இருக்கும் மிகச்சிறந்த முன்னணி நடிகைகளில் ரகுலும் ஒருவராக கருதப்படுகிறார். இதற்கு அவரது சமூக ஊடக பதிவுகள் சான்று. நம்ப முடியாதபடி யோகா செய்த அவர், ஆச்சர்யமான தனது தலைகளை திருப்புகிறார். யோகா ஆர்வலர்களுக்கும், ஃபிட்னெஸ் ஃப்ரீக்குகளுக்கும் நிச்சயம் ரகுலின் அந்த வீடியோ உந்துதலைக் கொடுக்கும்.
NTSE Result 2020 : தேசிய திறனாய்வு தேர்வு முடிவுகள் வெளியீடு
குறிப்பிட்ட உணவைப் பின்பற்றுவதாகவும், கலோரிகளை எரிப்பதை ஒருபோதும் தவறவிடாமல் பார்த்துக் கொள்வதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் யோகா பயிற்றுனரின் மேற்பார்வையில், சக்ராசனா செய்யும் ரகுல் ப்ரீத் சிங், சுவரை முத்தமிடுகிறார். இந்த வீடியோவை ரகுலின் யோகா மாஸ்டர் அன்ஷுகா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். அதன் பிறகு ரகுல் ப்ரீத் சிங்கின் பலவேறு ஃபேன் பேஜ்களும் இந்த வீடியோவை, சமூக வலைதளங்களில் வெறித்தனமாக பகிர்ந்தன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"