Advertisment

வயசு 52-னு நம்புறீங்களா? பிரபல நடிகருடன் மாஸாக குத்து டான்ஸ் போட்ட ரம்யா கிருஷ்ணன்- வீடியோ

கே.ஜி.எஃப் நடிகர் யாஷ் உடன் குத்து டான்ஸ் ஆடிய நடிகை ரம்யா கிருஷ்ணன்; வைரல் வீடியோ

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
yash ramyakrishnan

கே.ஜி.எஃப் நடிகர் யாஷ் உடன் குத்து டான்ஸ் ஆடிய நடிகை ரம்யா கிருஷ்ணன்

கே.ஜி.எஃப் நடிகர் யாஷ் உடன் நடிகை ரம்யா கிருஷ்ணன் குத்து டான்ஸ் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

ரெபல் ஸ்டார் அம்பரீஷ் - நடிகை சுமலதா ஜோடியின் மகனான அபிஷேக்கின் திருமணம், கடந்த வாரம் பெங்களூருவில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தெலுங்கு நடிகர் மோகன் பாபு, முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்ட ஏராளமான அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படியுங்கள்: ராதாரவி சொன்னாரு… வீட்டுக் காரரை கூட்டிட்டு வரலை: ராஜலட்சுமி செந்தில்

இந்த திருமண விழாவில் கன்னட நடிகர் யாஷும் கலந்துகொண்டார். இந்த விழாவில் நடிகர் யாஷ் நடனமாடிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிங்கப்பூர்நல்லி ராஜ குல்லா என்ற கன்னட படத்தில் இருந்து பிரேமா ப்ரீத்தி நன்னூசிரு என்ற பாடலுக்கு யஷ் மற்றும் தர்ஷன் இருவரும் நடனமாடினர். யாஷ் மற்றும் தர்ஷன் இருவரும் மெட்ச் மேட்ச் ஸ்டெப்ஸ், சிரிப்பு, ஹூக் ஸ்டெப்ஸ் செய்து மேலும் பலரை தங்களுடன் சேர அழைத்தனர். நடிகை ரம்யா கிருஷ்ணனும், யாஷுடன் இணைந்து கன்னட பாடலுக்கு செம டான்ஸ் ஆடினார்.

யாஷ் கடைசியாக கடந்த ஆண்டு வெளியான கே.ஜி.எஃப்: அத்தியாயம் 2 என்ற ப்ளாக்பஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். கே.ஜி.எஃப் திரைப்படம் இந்திய சினிமாவின் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாக உருவெடுத்தது. இப்படத்திற்குப் பிறகு யாஷ் தனது அடுத்த படத்தை அறிவிக்கவில்லை, ஆனால் திரைப்பட தயாரிப்பாளர் நிதேஷ் திவாரியின் ராமாயணத்தில் ராவணனாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. எல்லாம் சரியாக நடந்தால், படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், அவரது மனைவி ஆலியா பட் சீதாவாகவும் நடிக்க உள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Ramya Krishnan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment