/tamil-ie/media/media_files/uploads/2022/04/Vijay-Rashmika.jpg)
Rashmika mandana praises Actor vijay in Thalapathy66 pooja: ’தளபதி 66’ பட பூஜையில் நடிகர் விஜய்க்கு நடிகை ராஷ்மிகா மந்தனா திருஷ்டி கழித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வருகின்ற 13-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தின் டிரைலர் வெளியாகி, ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பட வெளியீட்டை எதிர்ப்பார்த்து விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. ஆம், விஜய் அடுத்தப் படத்திற்கான படபூஜை போடப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குனர் வம்சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். தற்போது ‘தளபதி66’ என்று அழைக்கப்படும் இந்தப் படத்தின் படபூஜை இன்று நடைபெற்றது.
Elated to kick start the ambitious#Thalapathy66 with a Pooja ceremony in Chennai @actorvijay@directorvamshi@iamRashmika@MusicThaman@SVC_official@Cinemainmygenes#Thalapathy66Launchedpic.twitter.com/3Z6Rev7fbi
— Sri Venkateswara Creations (@SVC_official) April 6, 2022
இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக, சுல்தான், புஷ்பா படங்களில் நடித்த நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாளான நேற்று அறிவிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: மகன்கள் பாச முத்தம்… பக்கத்தில் பிரேமலதா… விஜயகாந்த் வைரல் போட்டோஸ்
இந்தப் படத்தை எஸ்.வி.சி கிரியேஷன் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இதன் மூலம் தமன் முதன்முதலாக விஜய்யுடன் இணைகிறார். இந்தப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. இதன் மூலம் விஜய் நேரடியாக தெலுங்கு படத்தில் அறிமுகமாகிறார்.
தளபதி66 திரைப்படம் குடும்ப படமாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய்க்கு மகளாக தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் மகள் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில், இன்று நடந்த பூஜையில் ஆச்சரிய நிகழ்வாக, நடிகை ராஷ்மிகா மந்தனா நடிகர் விஜய்க்கு திருஷ்டி கழித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாகி வருகிறது.
FanGaL's Dream came True 🥺❤️🥳🔥
— Pᴏᴋᴋɪʀɪ Sᴜᴊɪᥫ᭡🕊️ (@Suji__VFC) April 6, 2022
Though she is cringe 😬...But Pair wise Kyootness OverLoad 😚❤️🙈
Poramaiya iruku bha😭😭🤣🙁#Thalapathy66Pooja#Beast@actorvijay@iamRashmikapic.twitter.com/jBYCKLxmtu
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.