ரவி வர்மா ஓவியங்களுக்கு உயிர் கொடுத்த 11 நடிகைகளும் நடனக் கலைஞர்களும்!

11 பெண்களின் 12 படங்கள் இடம்பெற்றிருக்கும் இந்த காலண்டர் கடந்த 3-ம் தேதி சென்னையில் வெளியிடப்பட்டது.

By: Updated: February 5, 2020, 10:43:26 AM

G Venketram’s Calendar shoot for Naam : புகைப்படக் கலைஞர் ஜி வெங்கட் ராம், 2020 ஆம் ஆண்டிற்கு ஒரு தனித்துவமான காலெண்டரை NAAM அறக்கட்டளைக்காக வடிவமைத்துள்ளார். புகழ் பெற்ற ராஜா ரவி வர்மாவின் ஓவியங்களை தென்னிந்திய நடிகைகள் மற்றும் நடனக் கலைஞர்கள் பிரதிபலிக்கும்படியான அட்டகாசமான படங்களை அவர் எடுத்துள்ளார்.  நடிகை சுஹாசினியின் நாம் அறக்கட்டளை தனது 10-ம் ஆண்டை கொண்டாடுகிறது. ஆகையால், “இந்திய பெண்களை” கொண்டாடும் வகையில் ரவி வர்மனின் ஓவியங்களுக்கு உயிர் கொடுக்கச் செய்திருக்கிறார்கள்.

சிம்புவின் குத்து பாடலுடன் மணமேடைக்கு என்ட்ரி கொடுத்த மணப்பெண்! – வைரல் வீடியோ

11 பெண்களின் 12 படங்கள் இடம்பெற்றிருக்கும் இந்த காலண்டர் கடந்த 3-ம் தேதி சென்னையில் வெளியிடப்பட்டது. இதன் மூலம் திரட்டப்படும் ஒற்றைப் பெண்களின் வாழ்க்கை நிலையை சமூகத்தில் மேம்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் படங்களில் குஷ்பு, ஸ்ருதி ஹாசன், ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராஜேஷ், சமந்தா அக்கினேனி, நதியா, லிசி, லட்சுமி மஞ்சு நடனக் கலைஞர்களான ஷோபனா, பிரியதர்ஷினி கோவிந்த் மற்றும் சாமுண்டேஸ்வரி ஆகிய 11 பேர் இடம் பெற்றுள்ளனர்.

புகைப்படம் : ஜி வெங்கட் ராம்

போஸ்ட் புரொடக்‌ஷன் : திஷா ஷா

ஸ்டைலிங் : அமிர்தா ராம்

மேக்கப் & ஹேர் : பிரகிருதி அனந்த்

கேலண்டர் வடிவமைப்பு: பத்மஜா வெங்கட் ராம்

ரவி வர்மாவின் ஓவியங்களை பிரதிபலித்த சமந்தா, ஸ்ருதி ஹாசன், ரம்யா கிருஷ்ணன், குஷ்பூ!

Samantha Akkineni, G Venketram Photography for Naam சமந்தா – புதிய வாழ்க்கையின் அடையாளமாக கையில் பழத்தை வைத்திருக்கும் எதிர்பார்ப்புள்ள தாய் Shruti Haasan G Venketram Photography for Naam ஸ்ருதிஹாசன் 1 – குருபம் ராணியின் உருவப்படம் Nadhiya, G Venketram Photography for Naam நதியா – இந்த ஓவியம் வெவ்வேறு சமூக பின்னணிகளைச் சேர்ந்த பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பிரதிபலிக்கிறது Lakshmi Manchu G Venketram Photography for Naam லட்சுமி மஞ்சு – ராணி சிம்னாபாய் 1-ன் உருவப்படம். Nadhiya, G Venketram Photography for Naam ஷோபனா – ரவி வர்மாவின் மகள் மகாபிரபாவின் படம் Ramya Krishanan G Venketram Photography for Naam ரம்யா கிருஷ்ணன் – நளனின் கதைகளை அன்னத்திடம் கேட்கும் தமயந்தி Chamundeshwari G Venketram Photography for Naam சாமுண்டேஸ்வரி – திருவிதாங்கூரின் மூத்த ராணியாக விளங்கிய மகாராணி லட்சுமி பாயின் உருவப்படம் Khushbu Sundar G Venketram Photography for Naam குஷ்பு – கோவிலுக்கு சென்று வந்த மகாராஷ்டிர பெண்ணின் உருவப்படம் Shruti Haasan G Venketram Photography for Naam ஸ்ருதி ஹாசன் 2 – நிலவொளியில் ராதா Lyssi G Venketram Photography for Naam லிசி லட்சுமி – கேரளாவைச் சேர்ந்த ஒரு அரச குடும்பத்து பெண்ணின் உருவப்படம் Aishwarya Rajesh G Venketram Photography for Naam ஐஸ்வர்யா ராஜேஷ் – புதுக்கோட்டை ராணி என்ற உயர்ந்த எண்ணம் கொண்ட பெண்ணின் உருவப்படம் Priyadharshini G Venketram Photography for Naam பிரியதர்ஷினி கோவிந்த் – கடம்பரி, ஒரு நவீன, அறிவார்ந்த பெங்காலி பெண்ணின் உருவப்படம்.

சில நெட்டிசன்களின் ரியாக்‌ஷன்ஸ்

படங்களிலிருந்து கண்ணை விலக்க முடியவில்லை…

இந்த படத்திற்கு சதீஷும் பொருந்துவார்…

மிகவும் அழகாக இருப்பதாக இந்த பயனர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஓவியத்திற்கு உயிர் வந்திருந்தால் கூட இத்தனை அழகாக இருந்திருக்காது என ரம்யா கிருஷ்ணனை குறிப்பிட்டிருக்கிறார் இந்த பயனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Entertainment News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Ravi varma paintings calendar shoot g venketram

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X