தயாரிப்பாளர் ரவீந்தர் இன்ஸ்டாகிராமில் சோகமான பதிவு ஒன்றை பகிர்ந்ததைப் பார்த்த நெட்டிசன்கள் மனைவி மகாலட்சுமி உடன் பிரச்னையா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Advertisment
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் ரவீந்தர் சந்திரசேகர். லிப்ரா புரொடக்ஷன் என்ற நிறுவனம் மூலம் திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார். இவர் கடந்தாண்டு சீரியல் நடிகை மகாலட்சுமியை திடீரென திருமணம் செய்துகொண்டார். மகாலட்சுமியை ரவீந்தர் திருப்பதியில் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருமணம் குறித்து விமர்சனங்கள் எழுந்தாலும், அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் இந்த ஜோடி, அடுத்தடுத்து யூடியூப் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் ஜோடியாக பல்வேறு பேட்டிகளை கொடுத்து அதற்கான பதிலடியும் கொடுத்தது.
திருமணத்துக்குப் பிறகு ரவீந்தர்- மகாலட்சுமி ஜோடி சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருந்து வருகின்றனர். வழக்கமாக மகாலட்சுமி உடன் ஜோடியாக எடுத்த புகைப்படங்களைப் பதிவிட்டு, ரொமாண்டிக் கேப்ஷன் கொடுத்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்யும் ரவீந்தர், சமீபத்தில் போட்ட பதிவு தற்போது பேசு பொருளாகி வருகிறது. அந்த பதிவில் தான் சிங்கிளாக நின்றபடி எடுத்த கேண்டிட் புகைப்படத்தை பதிவிட்ட ரவீந்தர் சோகமான கேப்ஷனை கொடுத்துள்ளார்.
”அந்த பதிவில், நேசிப்பதற்காகவே வாழ்கிறோம். கடினமான நேரங்களில் சிரியுங்கள்.. ஏனெனில் அவர்கள் உங்கள் சோகத்தில் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்” என ரவீந்தர் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ரவீந்தரின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் மனைவி மகாலட்சுமியுடன் சண்டையா என கேள்வி எழுப்பி வருகின்றனர். வழக்கமாக ரவீந்தரின் பதிவிற்கு கமெண்ட் செய்யும் மகாலட்சுமி, இந்த பதிவிற்கு எந்த பதிலும் அளிக்காமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.