அனுஷ்கா எடை ஏன் அதிகமாச்சு? - உங்கள் கேள்வி இது தானா? அதுக்கான பதில் இங்கே உள்ளது!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
anushka weight gain, அனுஷ்கா

anushka weight gain, அனுஷ்கா

சமீபத்தில் வைரலான நடிகை அனுஷ்கா படத்தை பார்த்த ரசிகர்கள், அவர் ஏன் எடை கூடிவிட்டார் என்று கேள்வி எழுப்பினர். அதற்கான பதில் தற்போது வெளிவந்துள்ளது.

Advertisment

ஜெயலலிதாவாக மாறும் அனுஷ்கா :

பாரதிராஜா இயக்கத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க பலர் திட்டமிட்டுள்ளனர்.

இது தொடர்பாக இயக்குநர் விஜய், பிரியதர்ஷன் மற்றும் பாரதிராஜா இடையே கடும் போட்டி நிலவுகிறது. விஜய் இயக்கும் படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் வித்யா பாலன் அல்லது நயன்தாரா நடிப்பார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisment
Advertisements

மறு ஜென்மம் எடுக்கும் ஜெயலலிதா ! வதந்திகள் உறுதியானதா?

இந்நிலையில், பாரதிராஜாவும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை இயக்கும் வேலைகளைத் தொடங்கி இருக்கிறார் என கூறப்படுகிறது. மும்பையைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் ஒன்று இப்படத்தை தயாரிக்க இருப்பதாகத் தெரிகிறது.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக்க ஏன் இத்தனை போட்டி?

சமீபத்தில் உடல் எடை கூடிய நிலையில் அனுஷ்கா தோற்றமளிப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. அந்தப் புகைப்படங்களைப் பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், தற்போது இந்தக் கதாபாத்திரத்திற்காகத் தான் அவர் உடல் எடையை அதிகரித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

Anushka Shetty Jayalalithaa

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: