/tamil-ie/media/media_files/uploads/2022/01/download.jpg)
Dhanush and Aishwaryaa Rajinikanth split : தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியினர் 18 வருட திருமண வாழ்வை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் விவாகரத்தை கொண்டாடும் வகையிலும், திருமணங்களே தேவையில்லை என்ற ரீதியிலும் இயக்குநர் ராம்கோபால் வர்மா ட்வீட்களை வெளியிட்டு வருகிறார்.
மேடையில் ரொமான்ஸ் பாடல்- வெட்கம்… கனவுகளாய் விரியும் பழைய சந்தோஷம்!
திருமணங்களின் அபாயங்கள் குறித்து எச்சரிக்கை செய்கிறது நட்சத்திர தம்பதியினரின் விவாகரத்து. இது வரவேற்கதக்கது என்ற ரீதியில் அவர் ட்வீட்களை பதிவு செய்துள்ளார்.
Nothing murders love faster than marriage ..The secret of happiness is to keep loving as long as it remains and then move on instead of getting into the jail called marriage
— Ram Gopal Varma (@RGVzoomin) January 18, 2022
திருமணங்கள் போன்று வேறெதுவும் காதலை அத்தனை விரைவாக கொன்றுவிடாது. தொடர்ந்து காதலித்துக் கொண்டே இருப்பதும், தேவையென்று தோன்றும் போது பிரிந்துவிடுவதும் தான் மகிழ்ச்சியின் ரகசியம் என்று கூறியுள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/01/1-2.jpg)
விவேகமான மக்கள் காதலிப்பார்கள்; முட்டாள்கள் திருமணம் செய்து கொள்வார்கள். திருமணத்தை அவர்கள் கொண்டாடும் நாட்களைக் காட்டிலும் குறைவான காலமே திருமண வாழ்வில் காதல் நிலைத்திருக்கும். திருமணங்களை விட விவகாரத்துகளையே சங்கீத் போன்ற சிறப்பு நிகழ்வுகள் வைத்து கொண்டாட வேண்டும். ஏன் என்றால் திருமணம் என்ற பந்தத்தில் இருந்து விடுதலை கிடைக்கிறது இதனால் என்றும் அவர் பல்வேறு சர்ச்சை மிகுந்த ட்வீட்களை பதிவு செய்துள்ளார்.
தனுஷ்- ஐஸ்வர்யா பிரிவு: சவுந்தர்யா ரஜினிகாந்த் ரியாக்ஷன்!
தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மணவாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவிப்பு
திங்கள் கிழமை இரவு தனுஷ் - ஐஸ்வர்யா ஆகியோர் தங்களின் திருமண உறவில் இருந்து பிரிவதாக தனித்தனியே தங்களின் சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்திருந்தனர். 18 வருடங்கள் நண்பர்களாக, தம்பதியராக, பெற்றோர்களாக, நலம் விரும்பிகளாக ஒன்றாக இருந்தோம். வளர்ச்சி, புரிதல், விட்டுக்கொடுத்தல் மற்றும் ஏற்றுக் கொள்ளுதல் என்று இந்த பயணம் வளர்ந்து வந்தது. இன்று எங்களின் பாதை ஒன்றைவிட்டு ஒன்று பிரிகிறது. நாங்கள் இருவரும் பிரிய இருக்கின்றோம் என்று அந்த குறிப்பில் பதிவிடப்பட்டிருந்தது. இந்த தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.