ராக்கெட்ரி படம் டீசர் வெளியானது... நம்பி நாராயணன் பற்றி மாதவன் சொல்லும் கதை

இஸ்ரோ அறிவியல் விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை திரைப்படமான ராக்கெட்ரி படத்தில் நடிகர் மாதவன் நடித்துளார். இந்தப் படத்தின் டீஸர் இன்று வெளியாகியுள்ளது.

இஸ்ரோவில் அறிவியல் விஞ்ஞானியாக பணி புரிந்தவர் கேரளாவைச் சேர்ந்த நம்பி நாராயணன். அந்நிய நாட்டிடம் பணம் பெற்றுக்கொண்டு ராக்கெட் தொழில்நுட்பம் தொடர்பான ரகசியங்களை விற்பனை செய்ததாக, அவர்மீது கடந்த 1994-ல் வழக்குத் தொடரப்பட்டு, கைதுசெய்யப்பட்டார்.

இஸ்ரோவின் ரகசியங்களை விற்றதாக குற்றம் சுமத்தப்பட்ட நம்பி நாராயணன் யார் ?

இந்த வழக்குக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்றும், நம்பி நாராயணன் குற்றமற்றவர் எனவும் தெரியவந்தது. இந்த வழக்கில் விஞ்ஞானி நம்பி நாராயணனை நேரில் சந்தித்த கேரளா முதல்வா் பினராயி விஜயன் அவரிடம் ரூ.50 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

ராக்கெட்ரி படம் டீசர்

தற்போது, இவரின் கதையை “ராக்கெட்ரி- தி நம்பி எஃபெக்ட்” என்ற பெயரில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில்படம் இயக்கியுள்ளனர் . அதை இயக்குநர் ஆனந்த் மகாதேவன் இயக்குகிறார். அதில், நம்பி நாராயணன் கேரக்டரில் நடிகர் மாதவன் நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது. மிகவும் எளிமையாக வெளியான இந்த டீசரை அனைவரும் நல்ல வரவேற்பு அளித்து வருகின்றனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close