அனு போட்ட கொலை பழி: எப்படி சரி செய்வாள் ரோஜா?

சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட அனுவோ, அஸ்வினின் அறைக்குச் சென்று மாத்திரையை மாற்றி வைப்பதற்கான வேலையை செய்கிறாள்.

சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட அனுவோ, அஸ்வினின் அறைக்குச் சென்று மாத்திரையை மாற்றி வைப்பதற்கான வேலையை செய்கிறாள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Serial News, Sun TV-Roja Serial

ரோஜா சீரியல்

Tamil Serial News:  சன் டிவி ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் சீரியல் என்றால் அது ‘ரோஜா’ சீரியல் தான்.

பிக் பாஸ் வீட்ல பெஸ்ட் பெர்ஃபார்மென்ஸ் இவங்க தான்…

Advertisment

ஒப்பந்த திருமணம் செய்து கொண்ட ரோஜாவும், அர்ஜுனும் காதலில் லயித்து, தற்போது ஆதர்ச தம்பதிகளாக இணைந்து வாழ்கின்றனர். இவர்களின் ரொமான்ஸை பார்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் உள்ளது. இவர்களை பிரித்து, அர்ஜூனை தான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என வில்லத்தனமான பிளான்களை போட்டு வரும் அனுவிற்கு தொடர்ந்து ஏமாற்றம் தான். ஆனாலும் தனது வில்லத் தனத்திலிருந்து பின் வாங்காமல், புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் அனு.

அஸ்வினுக்கு ஜூஸில் லெமன், உப்பை கலக்கிக் கொடுத்து கொலை செய்ய திட்டமிட்ட அனுவோ, அந்த பழியை ரோஜா மீது போட எண்ணுகிறார். இந்த முறை உஷாராக இருந்த அர்ஜுனோ, அனு செய்த அனைத்தையும் தன் போனில் வீடியோ எடுத்து, அனைவரிடமும் காட்டி அசிங்கப்படுத்துகிறார். ஆனால் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொண்ட அனு, மீண்டும் தனது வேலையை ஆரம்பித்தாள். அஸ்வினுக்கு கொடுக்கும் மாத்திரையை மாற்றி வைத்துவிட்டு ரோஜா மீது பழியை போட பிளான் போடுகிறாள் அனு.

இதற்கிடையே அஸ்வினும் பூஜாவும் திருமணம் செய்துக் கொண்டதை அர்ஜுன், ரோஜாவிடம் கூறி, அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என பூஜாவை அழைத்து வந்து அஸ்வினை சந்திக்க வைக்கிறார்கள். இதனால் அஸ்வின்-பூஜா, அர்ஜூன்-ரோஜா இரண்டு ஜோடிகளும் மனம் விட்டு பேசிக் கொள்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட அனுவோ, அஸ்வினின் அறைக்குச் சென்று மாத்திரையை மாற்றி வைப்பதற்கான வேலையை செய்கிறாள். அஸ்வின் அறையில் கேமரா இருப்பதை பார்த்த அனு, அதை துணியால் மறைத்து விடுகிறாள்.

கலைஞரின் கனவுத் திட்டம் எப்படி இருக்கிறது?

Advertisment
Advertisements

இது தெரியாத அஸ்வினும், வழக்கம் போல மாத்திரையை சாப்பிட்டு விடுகிறான். சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுகிறான். சட்டென பதறிப்போன குடும்பத்தினர் அஸ்வினை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அஸ்வின் சாப்பிட்ட மாத்திரையால் தான் பிரச்சனை என்பதை டாக்டர்கள் கண்டுபிடிக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட அனு, ரோஜா மீது பழியைப் போட்டு, அவளை சிறைக்கு அனுப்ப பாட்டியிடம் போட்டுக் கொடுக்கிறாள்.

தன் மீதான பழியை ரோஜா எப்படி சரி செய்வாள்? பொறுத்திருந்து பார்ப்போம்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Tv Serial Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: