கடைசியில் விக்ரமுக்கும் இந்த நிலையா? என்ன செய்ய போகிறார் விஷால்?

Tamilrockers Leaked Vikram-Keerthy Starrer Saamy Square: வரிசையாக  திரைக்கு வரும் படங்கள் அனைத்தும் தமிழ் ராக்கர்ஸில் லீக்காகி வருகிறது. 

Tamilrockers Leaked Saamy Square Full Movie Online: விக்ரம் நடிப்பில் பெரும் எதிர்ப்பார்புக்கு இடையில் வெளியான சாமி -2 திரைப்படம், வெளியான முதல் நாளே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் லீக் ஆகியுள்ளது.

கடந்த 2003-ம் ஆண்டு ஹரி மற்றும் விக்ரம் கூட்டணியில் வெளியான சாமி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.  போலீஸ் கதாபாத்திரத்திற்கு அளவு எடுத்து தைத்தது போல் விக்ரம் சாமி படத்தில் நடிப்பில் அசத்தி இருந்தார்.

Tamilrockers Leaked Saamy Square Full Movie: தமிழ் ராக்கர்ஸ் லீக்:

நடிகர் விக்ரமின் சினிமா வாழ்க்கையில் சாமிக்கு மிகப் பெரிய பங்குண்டு.  நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தின்  இரண்டாம் பாகத்தை ஹரி எடுக்க இருப்பதாக அறிவித்தார்.  அறிவிப்பு வெளியான நாள் முதலே படம் குறித்த எதிர்பார்பு ரசிகர்களிடம் அதிகமாக இருந்தது.

இந்நிலையில், சாமி – 2 திரைப்படம்  நேற்று (21.9.18) வெளியானது.   விக்ரமுடன் கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா, பிரபு, ஜான் விஜய், ஓ.ஏ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.  குறிப்பாக படத்தில் பாபி சிம்ஹா மற்றும் விக்ரமின் நடிப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில்  சாமி 2 திரைப்படம்  வெளியான முதல் நாளே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில்   வெளியகி இருப்பதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Torrent Website Tamilrockers Leaked Saamy 2 Full Movie, தமிழ் ராக்கர்ஸ்

Torrent Website Tamilrockers Leaked Saamy 2 Full Movie: தமிழ் ராக்கர்ஸ் : சாமி 2 லீக்

விடுமுறை நாட்கள் என்பதால்  நண்பர்கள், இளைஞர்கள் குடும்பங்களோடு சென்று படத்தை திரையரங்குகளில் பார்க்க  வாய்ப்பு அதிகம் என்று  தியேட்டர் வினியோஸ்தர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால்   இதற்கு பின்னடைவு எற்படுத்துவதை போல் தமிழ் ராக்கர்ஸ் சாமி 2 படத்தை இணையத்தில்  வெளியிட்டுள்ளனர்.

read more.. மகிழ்ச்சியாக இருந்த சமந்தாவின் கணவருக்கு வந்த சோதனை

நடிகர் சங்கத்தின் செயலாரும், தயாரிப்பு சங்கத்தின் தலைவருமான விஷால்,  தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ் கன் போன்ற இணையதளங்களில் புது படங்கள்  ரீலீஸ் ஆவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார். ஆனால் தற்போது வரிசையாக  திரைக்கு வரும் படங்கள் அனைத்தும் தமிழ் ராக்கர்ஸில் லீக்காகி வருகிறது.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close