/tamil-ie/media/media_files/uploads/2020/07/Sakshi-Agarwal-Body-Shaming-Bigg-Boss-Tamil.jpg)
Sakshi Agarwal, Body Shaming, Bigg Boss Tamil
நடிகை சாக்ஷி அகர்வால் நடிகையாவதற்கு முன்பு, ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவரது ஃபிட்டான உடல், மற்றவர்களுக்கு உந்துதலாக இருந்தது. குறிப்பாக, இந்த பூட்டுதலின் போது ஃபிட்னெஸில் மேலும் ஊக்கமளித்தது. ஒருவர் வீட்டிலிருந்தவாறே, செய்யக்கூடிய பல்வேறு பயிற்சிகளை ஒன்றன்பின் ஒன்றாக சாக்ஷி பதிவேற்றி வருகிறார்.
சர்ச்சையில் மிஷ்கினின் ‘பிதா’: லோகோவால் எழுந்த பிரச்னை
இதற்கிடையே தனது முக கொழுப்பை குறைப்பது தான் மிகப்பெரிய சவாலாக இருந்தது என தெரிவித்துள்ளார் சாக்ஷி. தனது முந்தைய புகைப்படத்துடன் சாக்ஷி வெளியிட்ட பதிவில், “இந்த இரண்டு பேரும் ஒரே ஆள் தான் என்பதை எத்தனை பேர் நம்புகிறீர்கள். ஆம், அது நான் தான். முகத்தில் உள்ள சதையை குறைப்பது தான் எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஆம், பள்ளியில் எனது வகுப்பு மாணவர்கள் மற்றும் சீனியர்களால் உருவ கேலிக்கு ஆளானேன். சிலர் என்னை மண் மண்டை, புத்தக புழு, குண்டு பூசணிக்காய் என்றெல்லாம் அழைத்தார்கள்.
ஆனால் நான் வருந்தவில்லை. எனக்கு படிப்பு தான் முக்கியம் என்பதை பள்ளி முதல் எம்.பி.ஏ வரை நினைவில் கொண்டேன். நான் இன்று எப்படி இருக்கிறேனோ அப்படியே இருக்க விரும்புகிறேன். எனக்காக மட்டும் தான் எடையைக் குறைத்தேன். அதற்காக நான் பட்டினி கிடக்கவில்லை அல்லது கத்திக்கு கீழ் நிற்கும் எந்த வேலையையும் செய்யவில்லை. உடற்பயிற்சியுடன் கூடவே மன தைரியம், கடின உழைப்பு, ஈடுபாடு உங்களை வாழ்வில் எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்லும்.” என்று பதிவிட்டுள்ளார்.
சாக்ஷியின் இந்த பதிவு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.