Advertisment

சர்ச்சையில் மிஷ்கினின் ‘பிதா’: லோகோவால் எழுந்த பிரச்னை

தாங்கள் அந்த படத்துடன் தொடர்புடையவர்கள் இல்லை என, மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mysskin pistha movie

mysskin pistha movie

இயக்குனரும், தயாரிப்பாளருமான மிஷ்கினின் சமீபத்திய படம் ’பிதா’ சிக்கலில் மாட்டியுள்ளது. ஜி.ஆர்.அதித்யா இயக்கி, மிஷ்கின் தயாரிக்கும் இப்படத்தில், லோகோவைப் பயன்படுத்துவது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. ‘பிதா’ படத்தின் விளம்பர சுவரொட்டியில் தங்கள் நிறுவனத்தின் சின்னம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், தாங்கள் அந்த படத்துடன் தொடர்புடையவர்கள் இல்லை எனவும், மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Advertisment

’நீங்க யாரும் நோட் பண்ணல, ஆமா நா அம்மாவாகிட்டேன்!’ ரம்யா என்.எஸ்.கே

மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையில், "ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன் என்ற லேபிளின் கீழ் வெளியான "பிதா" திரைப்படத்திற்கான சமீபத்திய விளம்பரப் படங்களில் எங்கள் நிறுவனத்தின் லோகோ இணைக்கப்பட்டிருப்பதை நாங்கள் அறிகிறோம். மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் இதில் எந்த விதத்தில் தொடர்புடையது அல்ல என்பதை நாங்கள் தெளிவுப்படுத்த கடமைப்பட்டுள்ளோம். மேலும் இந்தப் படம் எங்கள் லோகோ மற்றும் பெயருடன் விளம்பரங்களை பரப்ப வேண்டாம், என்று தயவுசெய்து கேட்டுக்கொள்கிறோம். நன்றி" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கனரா பேங்க்: வாடிக்கையாளர்களே இது உங்களுக்கான நேரம் மிஸ் பண்ணாதீங்க!

இந்த படத்தின் தொடக்க விழா, எளிமையான முறையில் நடந்தது.  எட்செட்டெரா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர் மதியழகன், ஃபெமினா மிஸ் இந்தியா வேர்ல்ட் 2016 டைட்டில் வின்னர் அனுக்ரீதி, ஆகியோருடன் கலையரசன் மற்றும் ரமேஷ் திலக் ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment