/tamil-ie/media/media_files/uploads/2020/10/Samantha-Akkineni-in-Telugu-Bigg-Boss-4.jpg)
சமந்தா அக்கினேனி
தென்னிந்திய திரைப்படத் துறையில் மிகவும் விரும்பப்படும் நடிகை சமந்தா. தான் செய்யும் ஒவ்வொரு விஷயங்களிலும் தனது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தத் தவறுவதில்லை. ஃபிட்னெஸ், பிஸினெஸ், ஆர்கானிக் விவசாயம் என பிஸியாக இருக்கிறார் அவர்.
Tamil News Today Live: ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு – இன்று தீர்ப்பு
'பிக் பாஸ் 4' தெலுங்கின் சில அத்தியாயங்களை அவர் தொகுத்து வழங்குவார் என்ற செய்தியை நீங்கள் அறிந்திருக்கக் கூடும். அவரது மாமனார் நாகார்ஜுனா வட இந்தியாவில் தனது புதிய திரைப்படமான 'வைல்ட் டாக்' படப்பிடிப்பில் இருப்பதால், கொரோனா பிரச்னையை மனதில் கொண்டு, ஒவ்வொரு வார இறுதியும் ஹைதராபாத் வந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகவே தற்போது தெலுங்கு பிக் பாஸின் ஹோஸ்டாக மாரியிருக்கிறார் சமந்தா.
#Dussehra special #BiggBossTelugu4 with @Samanthaprabhu2 lo chala surprises unnai...Come and have fun!!!
Today at 6 PM on @StarMaa#MaaSundayBiggSunday@AkhilAkkineni8@ActorKartikeya@starlingpayal@AadhiHyperpic.twitter.com/4HpclEZODB
— starmaa (@StarMaa) October 25, 2020
இந்நிலையில் 'பிக் பாஸ் 4' தெலுங்கில் நுழைந்து போட்டியாளர்களுக்கு இனிமையான ஆச்சரியத்தை அளித்திருக்கிறார் இந்த அழகு நடிகை. அதன் புதிய ப்ரோமோவை ஸ்டார் மா சேனல் வெளியிட்டது. வீடியோ கான்பரன்சிங் மூலம் தனது மருமகளை வாழ்த்தியிருக்கிறார் நாகசைத்தன்யா. ஆயுத பூஜையில் தனது புதிய அவதராத்தை தொடங்கியிருக்கும் சமந்தாவுக்கு ரசிகர்களின் வாழ்த்துகள் குவிந்துக் கொண்டிருக்கின்றன.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.