Samantha Akkineni: சமந்தா... தென் இந்திய நடிகைகளில் முன்னணியில் இருப்பவர். அண்மையில் இவர் கர்ப்பமாகியிருப்பதாக மீடியாவில் வதந்திகள் இறக்கை கட்டியதால், அதை உடைக்கவே அடுத்தடுத்து ஃபிட்னஸ் வீடியோக்களை பறக்க விட்டார். இப்போது அடுத்த அஸைன்மெண்ட் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
திருமணப் பேச்சு எடுத்தாலே நடிகைகளின் மார்க்கெட் படுத்து விடுவதுண்டு. அதற்கு மாறாக திருமணம் ஆனபிறகும் சினிமாவில் முன்பைவிட உச்சத்திற்கு சென்று கொண்டிருப்பவர் சமந்தா. நாகார்ஜூனா- அமலா தம்பதியரின் மருமகள், தனது கணவரும் பிரபல நடிகர் என்றாலும், அவர்களின் சப்போர்ட் எதுவும் தேவைப்படாமல் சினிமா உலகில் கலக்குவதுதான் சமந்தாவின் ஸ்பெஷாலிட்டி!
சமந்தாவை முடக்க நினைப்பவர்களின் ஒரே ஆயுதம், அவர் கர்ப்பமாகிவிட்டதாக அவ்வப்போது புரளி கிளப்பி விடுவதுதான். ஆனால் அதையும் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் ஃபிட்னஸ் வீடியோக்கள் மூலமாக முறியடித்து வருகிறார் சமந்தா.
ஹாலிவுட் நடிகர்களுக்குப் பிறகு இதை செய்தது சமந்தா தான்!
அண்மையில் வெளியான அவரது, ‘ஓ பேபி’ படம் தெலுங்கு பாக்ஸ் ஆபீஸில் பெரும் வெற்றி பெற்றது. அடுத்து, ‘96’ தெலுங்கு ரீமேக்கிலும் நடித்து முடித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து 3 மொழிகளில் தயாராகும் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க சமந்தா தயாராகியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
சமந்தாவா இது....நம்ம கண்ணை நம்மளாலேயே நம்பமுடியலயே.....
தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இந்த சீரிஸின் படப்பிடிப்பு செப்டம்பர் 1-ம் தேதி சென்னையில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.