Samantha Akkineni : தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகை சமந்தா. இவ்விரு மொழிகளில் தற்போது முன்னணி நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். தன்னுடன் நடித்த தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்து வருகிறர். இவர் நடிப்பில் ‘ஓ பேபி', ‘மன்மதுடு2', ‘ஜானு’ ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.
சட்டம் படிக்க வந்து… திட்டமில்லாமல் நடிகையானேன்…!
இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், இந்தியா முழுவதும் முடக்கத்தில் உள்ளது. இதனால் அனைத்துத் துறைகளையும் போலவே, சினிமாத்துறையும் பெரியளவில் பாதிப்படைந்துள்ளது. சினிமா படப்பிடிப்பை மட்டுமே நம்பி வாழும் பல கலைஞர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதற்கிடையே முன்னணி நடிகர்கள் தங்கள் குடும்பத்தினரோடு நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இந்நிலையில் பல விருதுகளை வென்று குவித்த ஹாலிவுட் திரையுலகின் தலைசிறந்த நடிகையான (Helen Mirren) ஹெலன் மிர்ரேனிடம் நடிப்பு பயின்று வருகிறார் நடிகை சமந்தா.
காதல் கணவரின் கிரியேட்டிவ் சர்ப்ரைஸ்: பிறந்தநாளை படு ஜோராக கொண்டாடிய தொகுப்பாளினி
சமந்தா இதுகுறித்து வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிடம் பதிவில், இந்த ஓய்வு நேரத்தை சிறந்த முறையில் தான் பயன்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். அதோடு, ‘நான் ஒரு சிறந்த நடிகையாகப் போகிறேன், நீங்கள் கொஞ்சம் காத்திருந்து பாருங்கள்... இல்லையென்றால், நான் இந்த பதிவை நீக்கி விடுவேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 74 வயதாகும் ஹெலன் மிர்ரேன் ஆஸ்கர் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். அவரிடம் சமந்தா ஆன்லைனில் பயிற்சி எடுத்திருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”