VJ Manimegalai : உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்தியாவில் இந்த வைரஸின் பரவலை கட்டுப்படுத்த 3-ம் கட்ட, லாக் டவுன் அமல் படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இருந்ததைப் போல் இல்லாமல், இந்த முறை தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக இந்த வைரஸின் பரவல் சங்கிலியை உடைக்க ஒரே வழி, சமூக விலகலை கடைப்பிடிப்பது தான். ஆகையால் இதுவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த லாக் டவுனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
ரூ. 5-க்கு மாஸ்க்; தூத்துக்குடியில் அறிமுகமானது தானியங்கி முகக்கவச இயந்திரம்!
இந்நிலையில் தொலைக்காட்சியில் தொகுப்பாளினி மணிமேகலை தனது பிறந்தநாள் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 10 ஆண்டுகளாக தொலைக்காட்சி துறையில் இருக்கும் இவர், சமீபத்தில் 'குக் வித் கோமாளி' எனும் சமையல் நிகழ்ச்சியில் பங்குபெற்று பிரபலமடைந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு நடன இயக்குநர் உசேனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வெளியூர் சென்றிருந்த இவர்கள், கொரோனா ஊரடங்கு காரணமாக கிராமத்தில் மாட்டிக் கொண்டார்கள். தற்போது இருவரும் மகிழ்ச்சியாக அங்கு நாட்களை கழிக்கிறார்கள்.
இதற்கிடையே இந்த பிறந்தநாளை மறக்க முடியாத வகையில் கொண்டாடியிருக்கிறார் மணிமேகலை. கிராமத்தில் இருக்கும் அவரது கணவர் அங்கிருக்கும் சிறுவர்களுடன் சேர்ந்து தனது மனைவிக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த மணிமேகலை, ’ஒரே ஹேப்பியா இருக்கு இந்த பர்த் டே’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மதுபானக் கடைகளை திறப்பதில் ஏன் இந்த ஆர்வம் ? திமுக போராட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”