ரூ. 5-க்கு மாஸ்க்; தூத்துக்குடியில் அறிமுகமானது தானியங்கி முகக்கவச இயந்திரம்!

இந்த இயந்திரங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து மற்ற இடங்களிலும் இந்த இயந்திரங்களை அறிமுகம் செய்ய எண்ணம்.

Mask Vending Machine introduced in Tuticorin
Mask Vending Machine introduced in Tuticorin

கொரோன வைரஸ் நாடு முழுவதும் தீவிரமாக பரவி வறுகின்றது. பொதுமக்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள வீட்டில் இருந்து வெளியெ வரும்போது கட்டாயமாக முககவசம் அணிந்துவர வேண்டுமென மத்திய அரசு அறிவித்துள்ளது.போதுமான முககவசங்கள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.

மேலும் படிக்க : மதுபானக் கடைகளை திறப்பதில் ஏன் இந்த ஆர்வம் ? திமுக போராட்டம்

தமிழகத்திலேயே முதன்முறையாக தானியங்கி முககவசம் அளிக்கும் கருவியே தூத்துகுடியில் அறிமுகம் ஆகியுள்ளது.இதனை ராஜாஜி பூங்கா மற்றும் அரசு மருத்துவமனை வளாகத்தில் அறிமுகம் செய்து வைத்துள்ளார் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர்.ஐந்து ரூபாய்க்கு ஒரு மாஸ்க்கினை பெற்றுக் கொள்ளலாம்.

ஒரே நேரத்தில் 120 மாஸ்க்குகளை வைக்கமுடியும் என மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் அறிவித்துள்ளார். இந்த நிகழ்வின் போது மாநகராட்சி நகர் நல அலுவலர் எஸ்.அருண்குமார் உடன் இருந்தார். மக்களின் வரவேற்ப்பை பார்த்து மற்ற இடங்களிலும் இந்த கருவியை அமைப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Mask vending machine introduced in tuticorin

Next Story
மதுபானக் கடைகளை திறப்பதில் ஏன் இந்த ஆர்வம் ? திமுக கூட்டணி போராட்டம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com