பல்லாவரம் பள்ளியில் டாப்பர்: ஆச்சர்யமான சமந்தா ரிப்போர்ட் கார்டு

ரிப்போர்ட் கார்டில் சமந்தா எடுத்துள்ள மதிப்பெண்களை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர்.

ரிப்போர்ட் கார்டில் சமந்தா எடுத்துள்ள மதிப்பெண்களை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Samantha Akkineni report card, samantha movies

Samantha Akkineni report card, samantha movies

'மாஸ்கோவின் காவேரி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சமந்தா. அதன் பின் விஜய், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார். தெலுங்கு திரையுலகிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். அதன்பின் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகும், தமிழ் மற்றும் தெலுங்கில் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.

Advertisment

’சலூன் சண்முகம்’: விருதுகளை குவிக்கும் சார்லியின் குறும்படம்!

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, நடிகை பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஹேக் செய்த சிலர், சமந்தா அப்படியொன்றும் அழகில்லை என ஸ்டேட்டஸில் வைத்திருந்தனர். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பற்றி எரிந்தது. பின்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டுவிட்டது என பூஜா ஹெக்டே தெரிவித்தார்.

Advertisment
Advertisements

இதற்கிடையே சமூக வலைதளம் முழுக்க சமந்தாவின் பள்ளி ரிப்போர்ட் கார்ட் வெளியாகி செம வைரலாகி வருகிறது. பொதுவாக பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விஷயங்களை தெரிந்துக்கொள்வதில் அவரது ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுவதுண்டு.

கோவையில் திருடு போன பைக்: பார்சலில் வந்த ஆச்சர்யம்!

அந்தவகையில் ரிப்போர்ட் கார்டில் சமந்தா எடுத்துள்ள மதிப்பெண்களை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர். காரணம் அவர் பயங்கரமாக படிக்கும் மாணவியாக இருந்திருக்கிறார். பல்லாவரத்திலுள்ள தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்த சமந்தா, படிப்பில் படு சுட்டியாக இருந்திருக்கிறார். அதோடு திநகர் பள்ளியில் மேல்நிலைக் கல்வியை படித்த அவர், அதிலும் பெரிய படிப்ஸாக இருந்திருக்கிறார். இது டோலிவுட் , கோலிவுட்டின் தலைப்பு செய்தியாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Samantha Ruth Prabhu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: