தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இறுதியாக, தமிழில் வெற்றியடைந்த ’96’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘ஜானு’ படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் , கார்டனிங் மற்றும் யோகா குறித்த பதிவை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வந்தார் சமந்தா. தற்போது, இன்ஸ்டாகிராமில் சமந்தாவை samantharuthprabhuoffl பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே பத்து லட்சம் பேர் (11 மில்லியன்) என்ற மைல்கல்லை எட்டியது.
11 மில்லியன் பாலோயர்ஸ் குறித்த மகிழ்ச்சியடைந்த சமந்தா," சிறந்த மனிதர்களுடன் சிறந்தவொரு பயணம். ஏற்றம், இறக்கம், நன்மை, தீமை...... நீங்கள் எனக்காக இருந்ததைப் போலவே நான் உங்களுக்காக இருந்தேன் என்று நம்புகிறேன் என்று நடிகை சமந்தா பதிவிட்டார்.
’பாதை வேறு வேர் ஒன்று தான்’: அண்ணன்கள் குறித்து உருக்கமான சமந்தா!
உலகளவில், இன்ஸ்டாகிராமின் அதிகாரப்பூர்வ கணக்கு பக்கம் முதலிடத்தில் உள்ளது. 333 மில்லியன் ஃபாலோயர்கள் இதில் உள்ளனர். இரண்டாவது இடத்தில் நம்ம ‘அடித்தால் அடி, மிதித்தால் மிதி, இடித்தால் இடி’ அண்ணன் கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளார். இவர் 200 மில்லியன் பாலோயர்களைக் கொண்டுள்ளார்.
நம்ம இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இன்ஸ்டாகிராம் சமூக தள பக்கத்தில் 50 மில்லியன் பாலோயர்களை கடந்த முதல் இந்தியன் எனும் பெருமையைப் பெற்றிருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil