Advertisment

'அப்போ வயது 16; மாடலிங் வாழ்க்கை': இந்த சூப்பர் ஹிட் நடிகையை முடிஞ்சா கண்டுபுடிங்க!

16 வயதில் மாடலிங் செய்துக் கொண்டிருந்தப்போது எடுத்தப் புகைப்படத்தை பகிர்ந்துள்ள பிரபல நடிகை; இப்போதும் அப்படியே இருப்பதாக ரசிகர்கள் உற்சாகம்

author-image
WebDesk
New Update
samantha early photo

16 வயதில் மாடலிங் செய்துக் கொண்டிருந்தப்போது எடுத்தப் புகைப்படத்தை பகிர்ந்துள்ள பிரபல நடிகை; இப்போதும் அப்படியே இருப்பதாக ரசிகர்கள் உற்சாகம்

தான் 16 வயதில் மாடலிங் செய்துக் கொண்டிருந்தப்போது எடுத்த புகைப்படத்தை சமந்தா சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் சிறப்பாக நடித்து வருகிறார். மேலும், இவர் நடித்த வெப் சீரிஸ்களும் பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன. இந்தநிலையில், மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா நடிப்புக்கு தற்காலிகமாக பிரேக் விட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: சமந்தா நட்பு வட்டத்தில் லியோ பட தயாரிப்பாளர்: தமிழக கோவில்களுக்கு சுற்றும் போட்டோஸ் வைரல்

publive-image

தன் திறமையாலும், வெளிப்படையாகப் பேசும் மனோபாவத்தாலும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து வரும் சமந்தா ரூத் பிரபு மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். சமூக ஊடகங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் ஏப்ரல் 24 அன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பதின்பருவ புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படம் சமந்தாவுக்கு 16 வயது இருக்கும் போது எடுக்கப்பட்டது.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள அந்தப் படத்தில், சமந்தா மிகவும் பிரமிக்க வைக்கிறார், மேலும், அப்போதைய தோற்றத்திற்கும் தற்போதைய தோற்றத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அதே சமயம், நட்சத்திரங்களைப் போன்ற கண்கள் மற்றும் கனவுகள் நிறைந்த ஒரு ஏழ்மையான பின்னணியில் இருந்து வரும் இளம் பெண்ணாகவும் அந்தப் புகைப்படத்தில் காணப்பட்டார்.

publive-image

சமந்தா திரைப்படத் துறையில் பெரிய இடத்தைப் பிடிக்கும் முன், இளம் வயதிலேயே பகுதி நேர வேலைகள் மற்றும் மாடலிங் பணிகளை மேற்கொண்டார். இந்தப் புகைப்படம் அப்படியொரு சமயத்திலிருந்து வந்ததாக இருக்கலாம். அந்தப் படம் கருப்பு வெள்ளையில் இருந்தது. முழுக் கைகள் கொண்ட ஒரு சிறிய ஆடையை சமந்தா அணிந்திருந்தார். சமந்தா தலைமுடியில் கையை வைத்து கேமராவை விட்டு விலகி பார்த்துக்கொண்டு சோபாவில் அமர்ந்திருந்த நிலையில், இந்தப் படம் கிளிக் செய்யப்பட்டுள்ளது. அந்தப் படம் அவரது ரசிகர்களை அவரது 'ஏம் மாயா சேசவே' பட சமயத்திற்கு அழைத்துச் சென்றது, அதில் அவர் அப்பாவியாகவும், இனிமையாகவும் இருந்தார், மேலும் அவரது அம்சங்கள் இப்போது இருப்பதை விட யதார்த்தமாக இருந்தன.

குணசேகர் இயக்கிய பேண்டஸி காதல் கதையான சாகுந்தலம் படத்தில் சமந்தா சமீபத்தில் நடித்தார். பெண்களை மையப்படுத்திய படமாக இப்படம் 65 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால், இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. இருப்பினும் சமந்தா பல படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை தன் வசம் வைத்திருக்கிறார். குஷி படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கிறார் சமந்தா. மேலும் சிட்டாடல் வெப் சீரிஸிலும் நடித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Samantha Ruth Prabhu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment