குட்டி தேவதை வந்தாள்: புகைப்படத்தை வெளியிட்டு சிலிர்த்த சமீரா ரெட்டி!

Sameera Reddy's Instagram Post: “என்னுடைய குட்டி தேவதை, இன்று காலையில் வந்தாள். உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆசிர்வாதத்திற்கும் நன்றி”

By: Updated: July 13, 2019, 12:56:08 PM

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்த இவர், தொழிலதிபர் அக்‌ஷய் வர்தே என்பவரை 2014-ம் ஆண்டு மணந்துக் கொண்டார்.

’எனது கர்ப்பத்தைக் கொண்டாடுகிறேன்’ – வைரலாகும் சமீரா ரெட்டியின் படங்கள்!

இவர்களுக்கு 2015-ல் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் மீண்டும் தான் கர்ப்பமாக இருப்பதாக இந்த வருட துவக்கத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிவித்தார் சமீரா. தொடர்ந்து தனது படங்களையும் ஷேர் செய்து வந்தார். சமீபத்தில் கூட நிறைமாத கர்ப்பிணியாக தண்ணீருக்குள் ஃபோட்டோ ஷூட் நடத்தியிருந்தார். அதோடு, தான் கர்ப்பத்தைக் கொண்டாடுவதாகக் குறிப்பிட்டு அந்தப் படங்களை இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டிருந்தார்.

 

View this post on Instagram

 

Our little angel came this morning ????My Baby girl ! Thank you for all the love and blessings ❤️???????? #blessed

A post shared by Sameera Reddy (@reddysameera) on

இந்நிலையில் நேற்று காலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் கையை படம் பிடித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கும் சமீரா, “என்னுடைய குட்டி தேவதை, இன்று காலையில் வந்தாள். உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆசிர்வாதத்திற்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Entertainment News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Sameera reddy delivered baby girl

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X