சூர்யா – கௌதம் மேனன் வெற்றிக் கூட்டணியில் வெளியான திரைப்படம் வாரணம் ஆயிரம். இந்த படம் மூலம் கோலிவுட்டில் மேக்னாவாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதைக் கொள்ளைக் கொண்டவர் சமீரா ரெட்டி. அதன்பின், மாதவனுடன் வேட்டை, விஷாலுடன் வெடி போன்ற திரைப்படங்களில் நடித்தார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.
சமீரா ரெட்டிக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு தொழில் அதிபர் அக்ஷய் வர்தே என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு ஹன்ஸ் என்கிற மகனும், நைரா என்கிற மகளும் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு சமீரா படங்களில் நடிக்கவில்லை.
சமீரா, அவரின் கணவர் மற்றும் பிள்ளைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதித்து தற்போது குணமடைந்து உள்ளனர்.
இந்நிலையில் சமீரா தான் குழந்தைப் பெற்றபோது சந்தித்த கஷ்டங்கள் குறித்து பேசியுள்ளார். முதல் குழந்தை பிறந்தபோது தன்னால் குழந்தையை பார்த்துக் கொள்ள முடியவில்லை என்றும், தன் கணவர் தான் குழந்தையை கவனித்துக் கொண்டார் எனவும் சமீரா கூறியுள்ளார்.
உனக்கு நல்ல ஆரோக்கியமான குழந்தை பிறந்திருக்கிறது, ஆதரவான கணவர் இருக்கிறார், அப்புறம் ஏன் கவலையாக இருக்கிறாய் என மாமியார் தன்னிடம் கேட்டதாக சமீரா கூறியுள்ளார்.
ஏனென்றால் சமீரா அப்போது உடல் எடை கூடி இருந்தார். கிட்டத்தட்ட 105 கிலோ இருந்தார். அவருக்கு Alopecia areata எனும் பிரச்சனை இருந்தது. அதனால் முடி நிறைய கொட்டியது. மருத்துவ சிகிச்சைக்கு பின் தற்போது நலமாக இருப்பதாக சமீரா தெரிவித்துள்ளார்.
மேலும் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதும் குழந்தையை கவனித்துக் கொள்ள முடியாததை நினைத்து வருத்தப்பட்டு அழுததாகவும், கிட்டத்தட்ட ஒரு வருடம் கஷ்டப்பட்டதாகவும் சமீரா கூறியுள்ளார். இதனால் அவர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.
ஆனாலும், சமீரா இரண்டாவது குழந்தைக்கு விருப்பட்டார். அவரது கணவர் முதல் குழந்தைக்கு நீ பட்ட கஷ்டம் போதும் என தடுத்தும், சமீரா இந்த முறை தைரியமாக முடிவெடுத்தார். அவருக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
உடல் எடை பிரச்சனையால் துவண்டு விடாமல் சமீரா மீண்டும் குழந்தை பெற்றுள்ளார். தற்போது பெண்களுக்கு அவர் ஆலோசனையும் கூறி வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil