Complaint against Bigg Boss Tharshan: கடந்தாண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துக் கொண்டவர் மாடல் தர்ஷன். கடினமான போட்டியாளராக இருந்த அவரை, நிகழ்ச்சியின் இறுதியில் வெற்றியாளராவார் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அது நடக்கவில்லை. இருப்பினும் மக்கள் மனதை வென்ற தர்ஷனுக்கு நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதும் நிறைய அன்பும், வரவேற்பும் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் தர்ஷனுக்கு வாய்ப்பு வழங்குவதாக கமல்ஹாசன் அறிவித்தார்.
’விடிவி எனக்கு அவ்ளோ ஸ்பெஷல்…’ கெளதம் மேனனை புகழ்ந்து தள்ளிய த்ரிஷா – வீடியோ
இதற்கிடையே தர்ஷன் பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக இருந்த போது ஷெரினுடன் நட்பாக பழகினார். இவர்களது நட்பை போட்டியாளர்கள் சிலர் காதல் என்று பேசினர். ஆனால் தர்ஷன் தனக்கு வெளியில் ஒரு காதலி இருப்பதாக வெளிப்படையாக தெரிவித்தார். மாடலிங் துறையில் அவருக்கு உதவியாக இருந்த ஷனம் ஷெட்டிதான் தர்ஷனின் காதலி என்று தகவல்கள் வெளியாகின.
திருமணம் சீரியல்: ஜனனிக்கு எதிராக அனிதா.. மாயாவின் மாஸ்டர் பிளான் சக்சஸ்
அதோடு, பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த சமயத்தில் தர்ஷன் குறித்து வீடியோ வெளியிட்ட ஷனம் ஷெட்டி, “என்னால் தர்ஷனின் வெற்றி பறிபோவதாக பேசுகின்றனர். அதனால் இனி நான் தர்ஷனைப் பற்றி பேசப்போவதில்லை. என் வாழ்வில் அவர் இல்லை” என்று கண்ணீருடன் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது தர்ஷன் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக சென்னை காவல் ஆணையரிடம் புகாரளித்துள்ளார் ஷனம் ஷெட்டி.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Sanam shetty complaints against bigg boss tharshan
தடுப்பூசி பாதுகாப்பானது, யாருக்கும் பக்கவிளைவுகள் இல்லை – அமைச்சர் விஜயகுமார்
ஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க!
பள்ளிக்கல்வி இலவச உபகரண பொருட்கள்: மறு ஆய்வு செய்ய உயர்மட்டக்குழு அமைப்பு
பட்டா கடத்தியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சர்ச்சை : வருத்தம் தெரிவித்த விஜய்சேதுபதி