’விடிவி எனக்கு அவ்ளோ ஸ்பெஷல்…’ கெளதம் மேனனை புகழ்ந்து தள்ளிய த்ரிஷா – வீடியோ

கெளதமின் படங்களுக்கு 50% பார்வையாளர்கள் இசைக்காகவே வருகிறார்கள்.

Trisha VTV movie, gautham menon
Trisha VTV movie

Trisha on VTV : இயக்குநர் கெளதம் மேனன் 2001 ஆம் ஆண்டு வெளியான ‘மின்னலே’ படத்தின் மூலம் அறிமுகமானார். மாதவன், ரீமா சென் நடித்திருந்த அந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக அதன் பாடல்கள் பெரிதும் கவனம் ஈர்த்தன. தொடர்ந்து ’காக்க காக்க’, ’வேட்டையாடு விளையாடு’, ’விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘என்னை அறிந்தால்’ போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார். அத்தனைப் படங்களிலும் பாடல்களும் சிறப்பான வரவேற்பைப் பெற்றன.

திருமணம் சீரியல்: ஜனனிக்கு எதிராக அனிதா.. மாயாவின் மாஸ்டர் பிளான் சக்சஸ்

இந்நிலையில், திரையுலகில் தனது 20-ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் கெளதம் மேனனை கொண்டாடும் நிகழ்வு ஒன்று சிங்கப்பூரில் நடக்கவிருக்கிறது. பிரபலங்கள் பலரும் கலந்துக் கொள்ளும் இவ்விழாவில் கெளதமின் படங்களில் இடம்பெற்ற பாடல்களைப் பாட, சிறப்பு இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘என்னை அறிந்தால்’ ஆகியப் படங்களின் நாயகி த்ரிஷா, கெளதம் மேனன் குறித்த சுவாரஸ்யமான விஷயங்களை சமீபத்தில் அவர் கலந்துக் கொண்ட நேர்க்காணலில் பகிர்ந்துக் கொண்டார்.

டி எம் கிருஷ்ணா புத்தக வெளியீட்டிற்கு இடம் தர அனுமதி மறுப்பு : ‘ஒற்றுமையின்மையை தூண்டிவிடலாம்’

”கெளதமின் படங்களுக்கு 50% பார்வையாளர்கள் இசைக்காகவே வருகிறார்கள். ஏனெனில் அவரது படங்களில் ஒரு மந்திரம் இருக்கிறது. அவருடன் நான் செய்த இரண்டு திரைப்படங்களும் (விண்ணைத்தாண்டி வருயாயா மற்றும் என்னை அறிந்தால்) மிகச் சிறந்த இசையைக் கொண்டிருந்தன. காதல் கதையோடு கெளதம் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் டைனமிக் கலவையைக் கொண்டிருந்ததால் வி.டி.வி இன்னும் கூடுதல் சிறப்பு வாய்ந்தது. அந்தப் படத்தின் இசை திரைப்படத்தை வேறு நிலைக்கு கொண்டு சென்றது. சிலருக்கு நல்ல இசை எது, ஒரு குறிப்பிட்ட காட்சிக்கு எது சரியாக இருக்கும் என்பதை உணர மேஜிக்கல் காது இருக்கும். ஆனால் கெளதமை பொறுத்தவரை சிறப்பு இசை எலும்பையே பெற்றிருக்கிறார். அதனால் தான் எந்த இசையமைப்பாளரிடமும் அவரால் நல்லிசையைப் பெற முடிகிறது” என்றார்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Trisha praises gautham menon for 20th year vtv

Next Story
திருமணம் சீரியல்: ஜனனிக்கு எதிராக அனிதா.. மாயாவின் மாஸ்டர் பிளான் சக்சஸ்Thirumanam serial maya
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com