டி எம் கிருஷ்ணா புத்தக வெளியீட்டிற்கு இடம் தர அனுமதி மறுப்பு : ‘ஒற்றுமையின்மையை தூண்டிவிடலாம்’

Arun Janardhanan கர்நாடக பாடகர் டி எம் கிருஷ்ணா தான் எழுதிய செபாஸ்டியன் & சன்ஸ்புத்தகத்தை வெளியிட இருந்த நிலையில், சென்னையில் உள்ள கலக்ஷேத்ரா அறக்கட்டளை வியாழக்கிழமை தங்கள் ஆடிட்டோரியத்தைப் பயன்படுத்துவதற்கான அனுமதியை ரத்து செய்தது. வெஸ்ட்லேண்ட் புத்தக வெளியீட்டாளர் கடிதத்தில், இது மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் ஒரு தன்னாட்சி அமைப்பு என்பதால், “அரசியல், கலாச்சார மற்றும் சமூக ஒற்றுமையைத் தூண்டும் எந்தவொரு திட்டத்தையும் அனுமதிக்க முடியாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அறக்கட்டளையின் இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் […]

t m krishna book event denied may instigate disharmony
t m krishna book event denied may instigate disharmony

Arun Janardhanan

கர்நாடக பாடகர் டி எம் கிருஷ்ணா தான் எழுதிய செபாஸ்டியன் & சன்ஸ்புத்தகத்தை வெளியிட இருந்த நிலையில், சென்னையில் உள்ள கலக்ஷேத்ரா அறக்கட்டளை வியாழக்கிழமை தங்கள் ஆடிட்டோரியத்தைப் பயன்படுத்துவதற்கான அனுமதியை ரத்து செய்தது. வெஸ்ட்லேண்ட் புத்தக வெளியீட்டாளர் கடிதத்தில், இது மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் ஒரு தன்னாட்சி அமைப்பு என்பதால், “அரசியல், கலாச்சார மற்றும் சமூக ஒற்றுமையைத் தூண்டும் எந்தவொரு திட்டத்தையும் அனுமதிக்க முடியாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அறக்கட்டளையின் இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் அனுப்பிய கடிதத்தில், வெஸ்ட்லேண்ட் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள புத்தகத்தில் “நிறைய வாக்கியங்கள் சர்ச்சைக்குரிய பிரச்சனைகளைத் தொடும். அதுமட்டுமின்றி, நிச்சயமாக நிறைய அரசியல் தொடர்பான பல தாக்கங்கள் இருக்கும்” என்றார்.

விமான நிறுவனங்கள் போல, ரயிலில் அத்துமீறும் பயணிகளை தடை செய்ய திட்டமிடும் ரயில்வே

“புத்தக வெளியீட்டிற்காக எங்கள் ஆடிட்டோரியத்தை வாடகைக்கு எடுக்கும் நேரத்தில் புத்தகத்தை சுற்றியுள்ள சர்ச்சைகள் குறித்து எங்களுக்குத் தெரியாது. எனவே, புத்தக வெளியீட்டு விழாவிற்கு வழங்கப்பட்ட எங்கள் அனுமதியை நாங்கள் திரும்பப் பெறுகிறோம் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க வருந்துகிறோம்,” என்று அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட்லேண்டின் வெளியீட்டாளர் கார்த்திகா வி கே, கலக்ஷேத்ரா முடிவு குறித்த பதிவுகளை ரீ ட்வீட் செய்தார். ரீ ட்வீட் செய்த சிறிது நேரத்திலேயே, “டெல்லி, சென்னையில் காவி கண்மூடித்தனமாக உள்ளது” என்று ட்வீட் செய்துள்ளார்.

இந்த புத்தகம் கர்நாடக இசையின் முதன்மை தாள கருவியான மிருதங்கத்தின் நூற்றாண்டு பழமையான வரலாற்றை, முக்கியமாக தலித் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த புகழ்பெற்ற மிருதங்க வாசிப்பாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் கதைகள் மூலம் விவரிக்கிறது.

இவ்விவகாரத்தில் அரசியல் அழுத்தம் இருக்கிறதா என்பது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த உயரதிகாரி ஒருவர், “அவர்கள் வெளியிட்ட பகுதிகள் ஒரு சமூகத்திற்கு எதிரான அரசியல் கருத்துகள் சிக்கலானவை. முழு புத்தகத்தையும் படித்தவர்கள் இது கலைஞர்களைப் பற்றிய அசல் புத்தகம் அல்ல என்பதை உறுதிப்படுத்துகிறார்கள், ஆனால் மாட்டு வதை பற்றிய வரைகலை விவரங்களுடன் பிராமணர்கள் குறித்த தேவையற்ற விஷயங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அத்தகைய புத்தகங்களுக்கு என்று ஒரு சந்தை இருக்கலாம், ஆனால் நிச்சயமாக கலக்ஷேத்ராவில் அது இல்லை” என்றார்.

வியாழக்கிழமை ஜெய்ப்பூரில் இருந்த கிருஷ்ணா, தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், கலக்ஷேத்ராஅறக்கட்டளையின் முடிவில் தான் ஆச்சரியப்பட்டேன் என்று கூறினார். “காலையில், கலக்ஷேத்ரா இயக்குநரிடம் பேச எனக்கு ஒரு கோரிக்கை வந்தது. ஆனால் எனது அழைப்புகளுக்கு பதிலளிக்கப்படவில்லை. நான் பின்னர் ஜெய்ப்பூரில் தரையிறங்கியபோது, ​​ஆடிட்டோரியத்தைப் பயன்படுத்துவதற்கான அனுமதியை ரத்து செய்வது குறித்து எனக்கு ஒரு மெயில் வந்தது. இன்று ஒரு செய்தித்தாளில் வெளியிடப்பட்ட எனது புத்தகத்தின் சில பகுதிகள், இந்த தடை முடிவுக்கு வழிவகுத்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்” என்றார்.

இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான கேரளா மாணவர்!

அவரது புத்தகத்தைப் பற்றி கேட்டபோது, ​​கிருஷ்ணா இது முக்கியமான நபர்களின் படைப்புகளைக் கொண்டாடுகிறது என்றார். “அவர்கள் தலைமுறை தலைமுறையாக இரத்தம் மற்றும் அழுக்கு மற்றும் எல்லாவற்றையும் கடந்து ஒரு நல்ல பசு தோல், நல்ல ஆடு தோல் கொண்டு ஒரு நல்ல மிருதங்கத்தை உருவாக்குவதை உறுதிசெய்து வருகின்றனர். இந்த தடை முடிவின் மூலம், அவர்கள் (கலக்ஷேத்ரா), ‘இந்த விஷயங்களை எல்லாம் விவாதிக்க வேண்டாம் என்று சொல்கிறதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“இந்த மக்களுக்கு மரியாதை செலுத்துவது, அவர்களின் வாழ்க்கையைப் புரிந்துகொள்வது, 100 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் செய்ததைப் பற்றி கூறுவது போன்ற இவை அனைத்தும் காலக்ஷேத்ராவுக்கு அசௌகரியமாக உள்ளதா? ஒருவரை அசௌகரியமாக்குவது தவறான விஷயம் அல்ல. கலை மற்றும் எழுத்து அதைத்தான் செய்ய வேண்டும்” என்றார் கிருஷ்ணா.

புத்தகம் சர்ச்சைக்குரியது என்று காலக்ஷேத்ரா அறக்கட்டளையின் கூற்றுக்கு பதிலளித்த கிருஷ்ணா, அதில் சர்ச்சைக்குரியது குறித்து தனக்கு எந்த விஷயமும் இருப்பதாக தெரியவில்லை. “ஆம், பசுவை சமூகத்தின் சில பிரிவினர் வணங்குகிறார்கள். ஆனால் அதே பிரிவினர் மாட்டுத் தோலில் இருந்து வரும் ஒலியையும் கேட்கின்றனர். அதை நாம் எவ்வாறு மறுக்க முடியும்? ஓரங்கட்டப்பட்ட இந்த அற்புதமான தயாரிப்பாளர்களை (மிருதங்கத்தை) பற்றி எனது புத்தகம் உள்ளது. இது மிருதங்கம் தயாரிப்பாளர்கள் மற்றும் மிருதங்கத்தின் யதார்த்தத்தைப் பற்றியது. முழு புத்தகத்தையும் யாரும் படிக்கவில்லை. அவர்கள் சில பகுதிகள் மற்றும் இரண்டு நேர்காணல்களை மட்டுமே பார்த்திருக்கிறார்கள்” என்றார்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: T m krishna book event denied may instigate disharmony

Next Story
பட்ஜெட் 2020: ‘குடியுரிமை திருத்தச் சட்டம் வரலாற்று சிறப்புமிக்கது’ – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரைBudget 2020, President Ramnath Kovind Speech at Parliament
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com