/tamil-ie/media/media_files/uploads/2020/02/Sanjana-Galrani.jpg)
Sanjana Galrani
Sanjana Galrani: பிரபலங்கள் தங்கள் ரசிகர்களுக்கு முன்மாதிரியாகவே பார்க்கப்படுகிறார்கள். காரணம் தங்களது விருப்பத்திற்குரிய நடிகர் / நடிகை செய்யும் பெரும்பாலான விஷயங்களை ரசிகர்களும் கூர்ந்து கவனித்து, அதனை பின் தொடர்கிறார்கள். பிரபலங்கள் நல்ல விஷயங்களை செய்யும் போது, அது சமூகத்துக்கும் முக்கியமான ஒன்றாக மாறுகிறது. அதுவே அவர்கள் தவிர்க்க வேண்டிய செயல்களை செய்யும் போது, அது ரசிகனின் வாழ்க்கையையும் பாதிக்கிறது. இந்நிலையில் நடிகை நிக்கி கல்ரானியின் சகோதரி நடிகை சஞ்சனா கால்ரானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவேற்றியிருந்தார். அதில் அவர் பி.எம்.டபிள்யூ காரை ஓட்டுக் கொண்டு இருந்தார்.
”ஆல் லவ் நோ ஹேட்” சென்னையில் சித் ஸ்ரீராமின் இசை நிகழ்ச்சி
காரை ஓட்டிய சஞ்சனா செல்ஃபி வீடியோவில் தாங்கள் திரைப்படம் பார்க்க செல்வதாகக் குறிப்பிட்டார். பிஸியான சாலையில் வண்டி ஓட்டுகிறோமே என்ற கவலை சிறிதும் இன்றி, ஜாலியாகக் காணப்பட்டார்கள். சஞ்சனாவின் நண்பரும் எதுவும் சொல்லாமல் கலகலப்பாக இருந்தார்.
அண்ணன் கோலி வழியில் தம்பி ஸ்ரேயாஸ் – பிட்னெஸ் வீடியோவில் அசத்தல்
இன்ஸ்டாகிராமில் அந்த வீடியோ வைரலான பிறகு பெங்களூரு காவல்துறையினரும் அதைப் பார்த்தனர். விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டும் போது செல்ஃபி வீடியோ எடுத்த சஞ்சனா கல்ரானிக்கு 1100 ரூபாய் அபராதம் விதித்து, மீண்டும் இப்படி செய்யக் கூடாது என அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. அருண் விஜயுடன் 'பாக்ஸர்' மற்றும் ராமருடன் 'போடா முண்டம்' ஆகிய படங்களில் சஞ்சனா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.