”ஆல் லவ் நோ ஹேட்” சென்னையில் சித் ஸ்ரீராமின் இசை நிகழ்ச்சி

”அன்பே பேரன்பே, கண்ணனா கண்ணே, மறு வார்த்தை, குறும்பா” உள்ளிட்ட சித் ஸ்ரீராமின் ஹிட் பாடல்களும் இந்த இசை நிகழ்ச்சியில் இடம்பெறும்.

By: February 4, 2020, 1:10:24 PM

முன்னணி தொலைக்காட்சியான ’ஜீ தமிழ்’ பாடகர் சித் ஸ்ரீராம் மற்றும் ‘நாய்ஸ் & க்ரைன்ஸ்’ ஆகியவற்றுடன் இணைந்து ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறது. ‘ஆல் லவ் நோ ஹேட்’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த நிகழ்ழ்ச்சி இசையால் வெகுஜன ரசிகர்களை ஈர்க்கும் என்று தெரிகிறது.

ரவி வர்மாவின் ஓவியங்களை பிரதிபலித்த சமந்தா ஸ்ருதி ஹாசன் ரம்யா கிருஷ்ணன் குஷ்பூ…

இந்த இசை நிகழ்ச்சியைப் பற்றி பேசிய பாடகர் சித் ஸ்ரீராம், “ஒற்றுமை, அன்பு மற்றும் நேர்மறை ஆகியவற்றை பரப்புவதில் இசை மிக சக்திவாய்ந்த கருவி என்று நான் எப்போதும் நம்புகிறேன். மக்களை ஆழ்ந்த மட்டங்களில் நகர்த்தி, கற்பனை செய்யாத வழிகளில் அவர்களை ஒன்றிணைக்க இசையால் மட்டுமே முடியும். மேடையிலிருந்து உண்மையான, தூய்மையான பாஸிட்டிவிட்டியை தவிர வேறொன்றையும் வெளிப்படுத்த மாட்டோம். எங்களுடன் இணைந்து மறுக்கமுடியாத அன்பை இந்த பிரபஞ்சத்திற்கு அனுப்புங்கள்” என்றார்.

இந்த இசை நிகழ்ச்சியில் லியோன் ஜேம்ஸ் (கீ போர்டு), கெபா (கிடார் கலைஞர்), சஞ்சீவ் (கிடார் கலைஞர்), பாஸ்கர் (வயலின் கலைஞர்), ராம்குமார் (டிரம்மர்), தபஸ் (டிரம்மர்), மைலை கார்த்திக் (நாதஸ்வரம்) உள்ளிட்ட இசைத் துறையைச் சேர்ந்த சில சிறந்த கலைஞர்களும் அங்கம் வகிக்கிறார்கள்.

சித் ஸ்ரீராமின் இந்த இசை நிகழ்ச்சியில், இயக்குநர்கள் கெளதம் மேனன், மணி ரத்னம், இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, இமான், நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், துருவ் விக்ரம், நடிகைகள் த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட கோலிவுட்டின் முக்கிய பிரபலங்களும் கலந்துக் கொள்வதாக தெரிகிறது.
கிரிக்கெட் வீரருடன் டூயட்! லாஸ்லியாவுக்கு இப்படி ஒரு ’லக்’கா?

”அன்பே பேரன்பே, கண்ணனா கண்ணே, மறு வார்த்தை, குறும்பா” உள்ளிட்ட சித் ஸ்ரீராமின் ஹிட் பாடல்களும் இந்த இசை நிகழ்ச்சியில் இடம்பெறும். பிப்ரவரி 8 ஆம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ நந்தனம் மைதானத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியை வரும் வாரங்களில் ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் பார்த்து ரசிக்கலாம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Sid sriram all love no hate music concert

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X