Bigg Boss Losliya : பிக்பாஸ் நிகழ்ச்சி பலரையும் ரசிகர்களுக்கு பரீச்சயமாக்கியுள்ளது. அந்த வகையில் பிக்பாஸ் தமிழ்-3 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியா. ஆரம்பத்தில் பெரும் ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்து வைத்திருந்த இவர், கவினுடனான நெருக்கத்தால் சில விமர்சனங்களையும் சந்தித்தார். இருப்பினும் அந்த நிகழ்ச்சியின் இறுதிவரை பயணித்தார். அதன் பிறகு இணையத்தில் தொடர்ந்து தனது படங்களை வெளியிட்டு வந்த லாஸ்லியா, சில கடை திறப்பு விழாக்கள் தனியார் நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் பங்கேற்று வந்தார்.
முருகப் பெருமானை அவமதிக்கிறதா யோகிபாபுவின் ‘காக்டெய்ல்’ பட போஸ்டர்?
. Sharing screenspace with @harbhajan_singh ???? pic.twitter.com/7IoB0OftMx
— Losliya Mariyanesan ▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️ᴾᵃʳᵒᵈʸ (@Losliyamaria96) February 3, 2020
இந்நிலையில் ‘பிரண்ட்ஷிப்’ என்ற திரைப்படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரும், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் வீரருமான ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கும் அறிவிப்பு நேற்று வெளியானது. இதனை கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும், அவரது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியோடு உறுதிப்படுத்தியிருந்தார்.
கொரோனா வைரஸ் தாக்குதல் – மாநில பேரிடராக அறிவித்த கேரள அரசு!
இந்நிலையில் ‘பிரண்ட்ஷிப்’ திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க லாஸ்லியா ஒப்பந்தமாகி உள்ளார். ஹர்பஜன் சிங்குடன் திரையை பகிர்ந்து கொள்ளவிருப்பதாக, லாஸ்லியாவும் தனது ட்விட்டரில் தெரியப்படுத்தியுள்ளார். இந்த செய்தி அவரது ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.