முருகப் பெருமானை அவமதிக்கிறதா யோகிபாபுவின் ‘காக்டெய்ல்’ பட போஸ்டர்?

ஒரு படத்தை ஹிட்டாக்கும் முயற்சியை கதைகளில் சொல்வதை தவிர்த்து மற்ற எல்லா ஏரியாவிலும் வைத்து விளையாடுவது சினிமாவில் அதிகரித்து வருகிறது. தமிழ் சினிமாவும் இதற்கு விதி விலக்கல்ல. ரஜினியை கிண்டல் செய்து போஸ்டரோ, டீசரோ வெளியிடுவது, பிறகு டீசர் ஹிட்டானவுடன், நாங்களே ரஜினி வெறியர்கள் தான் என்று ஒப்பிப்பது போன்ற கலாச்சாரத்தை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ரஜினி வெறும் சாம்பிள் தான். இன்னும் எவ்வளவோ சர்ச்சையான விஷயங்களை சீண்டி அதில் மக்களை பரபரப்பாக பேச வைத்து […]

முருகப் பெருமானை அவமதிக்கிறதா யோகிபாபுவின் 'காக்டெய்ல்' பட போஸ்டர்? சினிமா

ஒரு படத்தை ஹிட்டாக்கும் முயற்சியை கதைகளில் சொல்வதை தவிர்த்து மற்ற எல்லா ஏரியாவிலும் வைத்து விளையாடுவது சினிமாவில் அதிகரித்து வருகிறது. தமிழ் சினிமாவும் இதற்கு விதி விலக்கல்ல. ரஜினியை கிண்டல் செய்து போஸ்டரோ, டீசரோ வெளியிடுவது, பிறகு டீசர் ஹிட்டானவுடன், நாங்களே ரஜினி வெறியர்கள் தான் என்று ஒப்பிப்பது போன்ற கலாச்சாரத்தை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ரஜினி வெறும் சாம்பிள் தான். இன்னும் எவ்வளவோ சர்ச்சையான விஷயங்களை சீண்டி அதில் மக்களை பரபரப்பாக பேச வைத்து தங்கள் மைலேஜ்ஜை ஏற்றிக் கொள்வது வாடிக்கையாக உள்ளது.

’சிக்’ என்று உடல் எடையைக் குறைத்த ஹன்சிகா! அடுத்த இன்னிங்ஸிற்கு தயாராகிறாரா?

அதன் வழிவகை வந்து தற்போது சர்ச்சையாகி இருப்பது யோகிபாபு நடித்திருக்கும் காக்டெய்ல் திரைப்பட போஸ்டர்.

விஜய் முருகன் என்பவரது இயக்கத்தில் யோகிபாபு நடித்திருக்கும் படத்தின் போஸ்டர் இது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. கையில் வேலுடன் கடவுள் முருகன் கெட்டப்பில் யோகி பாபு போஸ் கொடுக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்க்கடவுள் முருகன் கெட்டப்பில் யோகிபாபு இப்படத்தில் இருக்கிறார். ஆனால் படத்திற்கு காக்டெய்ல் என மதுவின் பெயரை வைத்திருப்பதே சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கையில் வேல் , அவருக்கு பின்னே காக்கட்டூ எனப்படும் ஒருவகை வெள்ளைக் கிளி இருக்கிறது. காக்டெய்ல் என்ற பெயர் அந்த கிளியின் பெயராகவும் இருக்கலாம். ஆனால் படத்தைப் பற்றிய எந்த தகவலும் வருவதற்கு முன்பே சிலர் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வீட்டின் முன்பு திரண்ட ரசிகர்கள்: சிம்பு பிறந்தநாள் ஸ்பெஷல் வீடியோ

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள இயக்குனர் விஜய் முருகன், “காக்டெய்ல் எனும் டைட்டில் மதுவைப் பற்றியதல்ல. ஆஸ்திரேலியாவில் வாழும் காக்டெய்ல் கிளியை மையப்படுத்தி வைக்கப்பட்டுள்ள பெயர்” என்று தெரிவித்துள்ளார்.

எப்படியோ டைட்டில் வைரலாச்சு!! மேட்டர் ஓவர்!

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Yogi babus cocktail movie poster lord murugan

Next Story
ஆடாத ஆட்டமென்ன..? தன் வாயால் தானே கெட்ட பூர்ணா…Azhagu Serial, Sun TV, Sudha Poorna
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com