’சிக்’ என்று உடல் எடையைக் குறைத்த ஹன்சிகா! அடுத்த இன்னிங்ஸிற்கு தயாராகிறாரா?

அதர்வாவுக்கு ஜோடியாக ‘100’ படத்தில் நடித்திருந்தன. அதில் அவரின் பப்ளியான தோற்றம் குறித்து சில விமர்சனங்களும் எழுந்தன.

Hansika Motwani weight loss
Hansika Motwani

Hansika’s Latest Photo Turns Viral: விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், உள்ளிட்ட அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடியாக நடித்தவர் நடிகை ஹன்சிகா. தமிழ், தெலுங்கு சினிமா ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவர். சமீபத்தில், அதர்வாவுக்கு ஜோடியாக ‘100’ படத்தில் நடித்திருந்தன. அதில் அவரின் பப்ளியான தோற்றம் குறித்து சில விமர்சனங்களும் எழுந்தன.

இளசுகளை ஐஸ் கிரீமாய் உருக வைக்கும் மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் படங்கள்!

 

View this post on Instagram

 

It’s safe to say I have been working out ????

A post shared by Hansika Motwani (@ihansika) on

இந்நிலையில், ஹன்சிகாவின் சமீபத்திய படம் ஒன்று பலரையும் வாயடைக்க செய்துள்ளது. அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் ஒரு புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் மிகவும் மெலிதாக இருக்கிறார். அதோடு தான் ஒர்க் அவுட் செய்ததாகவும் அதில் குறிப்பிட்டிருக்கிறார். ஒரு சில படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் அவர் இருப்பதால் தான், இந்த அதிரடி எடை குறைப்பு என்று தெரிகிறது. கோலிவுட்டில் மீண்டும் ஒரு ரவுண்ட் வருவாரா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

வீட்டின் முன்பு திரண்ட ரசிகர்கள்: சிம்பு பிறந்தநாள் ஸ்பெஷல் வீடியோ

தவிர, தற்போது ‘மஹா’ என்ற பெண்ணை மையமாகக் கொண்ட ஒரு படத்தை கைவசமாக வைத்திருக்கிறார் ஹன்சிகா. சிம்பு நீட்டிக்கப்பட்ட சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் இந்தப் படத்தில், ஸ்ரீகாந்த், கருணாகரன், மஹத், சனம் ஷெட்டி, தம்பி ராமையா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Hansika motwani weight loss picture maha166538

Next Story
வீட்டின் முன்பு திரண்ட ரசிகர்கள்: சிம்பு பிறந்தநாள் ஸ்பெஷல் வீடியோsilambarasan, happy birthday simbu
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com