Happy Birthday Simbu: 'வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்திற்குப் பிறகு நடிகர் சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் அந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இளசுகளை ஐஸ் கிரீமாய் உருக வைக்கும் மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் படங்கள்!
இதற்கிடையே சிம்புவின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும். குறிப்பாக அவர் உடல் எடையைக் குறைத்து, புதிய தோற்றத்தில் வந்த போது, வாயடைத்துப் போனார்கள் ரசிகர்கள். இப்போது அவர் சரியான எடையுடன், புதிய தோற்றத்திலும் இருக்கிறார். சமீபத்தில் சிம்புவின் நண்பரும், நடிகருமான மஹத் ராகவேந்திரா மற்றும் பிராச்சி மிஸ்ராவின் திருமணத்திலும் அவர் கலந்துக் கொண்டார். அந்தப் படங்களும் இணையத்தில் வெளியாகி, பலரின் கவனத்தை ஈர்த்தன.
இந்நிலையில், சிம்பு தனது 37 வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதனைக் கொண்டாடுவதற்காக நேற்று இரவு சிம்புவின் வீட்டிற்கு முன்பாக ரசிகர்கள் கூடியிருந்தனர். அப்போது அவர், தனது வீட்டை விட்டு வெளியில் வந்து ரசிகர்களை வாழ்த்தி, கையசைத்தார். இதனால் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர் ரசிகர்கள். பின்னர் நடிகர் ஹரீஷ் கல்யாண் போன்ற நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார் சிம்பு.
தனுஷ் காட்டில் பட மழை! இளம் இயக்குநருடன் கூட்டணி!
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பெற்றோர்கள் டி.ராஜேந்தர் மற்றும் உஷா ஆகியோருடன் சிம்பு எடுத்துக் கொண்ட படங்கள் இணையத்தில் வைரலாகின. இதற்கிடையே சிம்பு தனது அடுத்த படமான ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பை அடுத்த வாரம் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் பொழுதுபோக்கு படமாக உருவாகும் இதில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆகியோர் நடிப்பது உறுதியாகியுள்ளது.