சரண்யா பொன்வண்ணனின் தந்தை, 95 வயது மூத்த இயக்குநர் மரணம்

இலங்கையில் 11 ஆண்டுகள் இருந்தபோது 11 சிங்கள திரைப்படங்களையும் இயக்கியிருக்கிறார் ஏ.பி.ராஜ்.

By: Updated: August 24, 2020, 03:12:27 PM

புகழ்பெற்ற நடிகை சரண்யா பொன்வண்ணனின் தந்தையும், மூத்த மலையாள இயக்குனருமான ஏ.பி.ராஜ் (ராஜ் ஆண்டனி பாஸ்கர்), மாரடைப்பால் சென்னையில் நேற்று காலமானார். 95 வயது பிரபல இயக்குனரான இவர், 70-க்கும் மேற்பட்ட படங்களை மலையாளத்திலும், தமிழில் ’துள்ளி ஓடும் புள்ளி மான்’, ’கை நிறைய காசு’ ஆகிய தமிழ் படங்களை மறைந்த மூத்த நடிகர் நாகேஷை வைத்து இயக்கியுள்ளார்.

ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபுவின் விருப்ப ஓய்வு கோரிக்கையை தமிழக அரசு ஏற்பு

ஆலப்புழாவைச் சேர்ந்த மூத்த இயக்குனர் ஏ.பி.ராஜ், தமிழ்நாட்டில் தான் தனது பெரும்பாலான நாட்களைக் கழித்தார். வாழ்ந்தது, படித்தது எல்லாமே தமிழகத்தில் தான். 1951 முதல் 1986 வரையிலான காலகட்டத்தில் திரைப்படங்களை இயக்கியுள்ளார். அவர் சென்னை விருகம்பாக்கத்திலுள்ள,  தனது மகள் சரண்யா பொன்வன்னனின் இல்லத்தில் நேற்றிரவு 8 மணியளவில் இறந்தார். அவரின் இறுதி சடங்குகள் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் என்று கூறப்படுகிறது.

ஓ.டி.டி-யில் வெளியாகும் சூரரைப் போற்று; சூரியாவின் முடிவுக்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு

சுவாரஸ்யமாக, அவர் டேவிட் லீனின் புகழ்பெற்ற திரைப்படமான ’பிரிட்ஜ் ஆன் தி ரிவர் க்வே’ படத்தை இணைந்து இயக்கியிருந்தார். இலங்கையில் 11 ஆண்டுகள் இருந்தபோது 11 சிங்கள திரைப்படங்களையும் இயக்கியிருக்கிறார் ஏ.பி.ராஜ். மலையாளத்தில் பிரேம் நசீர், ஜெயன் & மோகன்லால் ஆகியோருடன் பெரியளவில் வணிக ரீதியான வெற்றிகளைப் பெற்றார். ஹரிஹரன், ஐ.வி.சசி, பி சந்திரகுமார், ராஜசேகரன் போன்ற திரைப்பட இயக்குநர்கள் ஏ.பி.ராஜின் அஸிஸ்டெண்டுகள்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Saranya ponvannans father veteran director ab raj passed away

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X