/tamil-ie/media/media_files/uploads/2018/11/DrOSXc6UcAAjjtp.jpg)
சர்கார் ப்ரீமியர் ஷோ
சர்கார் ப்ரீமியர் ஷோ : ஒரு படத்தினை முதலில் வெளிநாடுகளில் வெளியிடப்படும் போது அந்த திரைப்படத்தினை சிலர் திருட்டுத் தனமாக சில மணி நேரங்களில் ஆன்லைனில் அந்த படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர் சிலர்.
திருட்டுத் தனமாக படம் வெளியாவதை தடுக்க சன்பிக்ஸர்ஸ் சர்கார் படத்தினை உலகம் முழுவதும் ஒரே நாளில் வெளியிடயுள்ளதாக அறிவித்திருந்தது.
அமெரிக்காவில் சர்கார் ப்ரீமியர் ஷோ
இந்நிலையில் இப்படத்தின் ப்ரீமியர் ஷோக்கள் இன்று அமெரிக்காவில் வெளியாக உள்ளது. அமெரிக்கா மட்டுமல்லாமல் உலகின் 80 நாடுகளில் இந்த படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
சுமார் 3,400 திரைகளில் இப்படம் நாளை திரையிடப்பட இருப்பதால் விஜய்யின் ரசிகர்கள் பெரும் ஆரவாரத்துடன் இந்த படத்திற்காக காத்திருக்கிறார்கள்.
For the first time ever in USA for any Indian film, #Sarkar intro song will be played twice in the below mentioned locations as a Diwali treat #SarkarUSPremieres#Sarkar
USA Release By @sarkarinusapic.twitter.com/C0vlmwpQ7D
— Thalapathy Vijay (@Actor_Vijay) 5 November 2018
அமெரிக்காவில் சில குறிப்பிட்ட திரையரங்குகளில் இந்த படத்தின் முதல் பாடல் இரண்டு முறை ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அமெரிக்கா வாழ் தமிழர்களுக்கு இது இரட்டிப்பு சந்தோசத்தைத் தரும் என்று சர்கார் திரைப்பட குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.