Sarkar Official Teaser : சர்கார் படம் டீசர் இன்று உலகம் முழுவதும் வெளியாகியது.
Advertisment
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ், யோகி பாபு மற்றும் வரலட்சுமி உட்பட பலரும் நடித்துள்ள சர்கார் படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸாக தயார் நிலையில் உள்ளது.
Sarkar Official Teaser : சர்கார் டீசர் ரிலீஸ் :
Advertisment
Advertisement
சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் சிறப்பாக நடைபெற்றது. அந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு பேசினார். ஆனால் கடைசியாக பேசிய விஜய்யின் பேச்சு உலக அளவில் பெரிய ஹிட். தரமான அரசியல் பேச்சாக இருந்தது அவர் உதித்த வார்த்தைகள்.
இந்நிலையில் சர்கார் படம் டீசர் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் உள்ள ரோகினி தியேட்டரில் இன்று மாலை நடைபெறுகிறது. மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்திலும் மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இந்த டீசருக்கான போஸ்டரையும் அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது.
இன்று மாலை ரோகினி திரையரங்கில் நடைபெற இருக்கும் சர்கார் டீசர் வெளியீடு நிகழ்ச்சியில் விஜய் உட்பட அனைத்து படக்குழுவினர் பங்கேற்றனர். பெரும் எதிர்ப்பார்புடன் இருக்கும் விஜய் ரசிகர்களுக்கு இந்த நிகழ்வு மேலும் உற்சாகத்தை கூட்டியுள்ளது. ஏனெனில் விஜய் பேசியதற்கு பிறகே டீசர் வெளியீடு நடைபெற இருக்கிறது.
தீபாவளி ரிலீஸ் என்பதால், இசை வெளியீட்டு விழாவிலேயே சரவெடிப் போல பேசினால் சிதறடித்த விஜய் இன்று என்ன ஸ்பெஷல் வெடி வைத்திருக்கிறார் என்று அவருக்கு மட்டுமே தெரியும்.