Advertisment

Sarkar Public Review : சர்கார் படத்தில் மெர்சல் காட்டியிருக்கும் விஜய்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sarkar Public Review

Sarkar Public Review

Sarkar Public Review : ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் சர்கார் படம் வெளியானதை ரசிகர்கள் அனைவரும் திருவிழா போல் கொண்டாடுகின்றனர்.

Advertisment

நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ், யோகி பாபு மற்றும் வரலட்சுமி உட்பட பலரும் நடித்துள்ள சர்கார் படம் இந்த தீபாவளிக்கு சரவெடியாக வெடித்து வருகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

வெளிநாட்டில் தொழிலதிபராக இருக்கும் விஜய், தேர்தலில் வாக்களிப்பதற்காக இந்தியா வருகிறார். ஆனால் வாக்களிக்க வந்த இடத்தில் அவரது ஓட்டு கள்ள ஓட்டாக பயன்படுத்தப்படுகிறது. அதனை தட்டிக் கேட்க முற்படும் விஜய்க்கு பல சவால்கள் காத்திருக்கிறது. இறுதியில் ஒரு பொதுமக்களாக தனது உரிமையை எப்படி நிலைநாட்டுகிறார் என்பதே சர்கார்.

தமிழ் ராக்கர்ஸ் vs சர்கார்... என்ன நடக்கிறது?

இப்படத்தில் தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் நிலவும் பல அரசியல் பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டுள்ளது. படத்தை பார்த்த பலரும் இப்படம் நிச்சயம் விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கான படம் தான் என்று ஆரவாரத்துடன் தெரிவித்து வருகின்றனர்.

Sarkar Public Review : சர்கார் படம் எப்படி ?

சர்கார் படம் பல சவால்களை மீறி இன்று வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த பலரும் ‘செம்ம, தூள், சர்கார் மாஸ்’ என்றெல்லாம் விமர்சனம் அளித்து வருகின்றனர். சமூக வலைதளம் முழுவதும் சர்கார் விமர்சனத்தால் ஸ்தம்பித்துள்ளது.

11.30 AM : சர்கார் படம் வெற்றிபெற, நகைச்சுவை நடிகர் சூரி, இயக்குநர் விக்னேஷ் சிவன், இயக்குநர் அட்லி, நடிகர் ஆர்யா உட்பட பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

10.00 AM : சர்கார் படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும், படத்தில் இருக்கும் விஜய்யை பார்க்கும்போது 90’ஸ் ஆண்டுகளில் இருக்கும் ரஜினியை பார்ப்பது போல் உள்ளது என்று கூறுகின்றனர்.

November 2018

9.00 AM : சர்கார் படத்தின் விஜய் நடிப்பு சிறப்பாக உள்ளதாகவும், ஒவ்வொரு பாட்டிலும் தளபதி நடிப்பு வெறித்தனமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்

November 2018

8.30 AM : இன்று அதிகாலை 5 மணிக்கே முதல் காட்சி தொடங்கியது. இந்த ரிலீஸை முன்னிட்டு நடிகர் விஜய்யின் போஸ்டர்களுக்கும் கட் அவுட்களுக்கும் ரசிகர்கள் மாலை அணிவித்து பால் அபிஷேகம் செய்து சிறப்பாக கொண்டாடினர்.

November 2018

8.15 AM : சர்கார் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு ரசிகர்கள் அனைவரும் தியேட்டர்களில் பெரிய பேனர்கள், கட் அவுட்கள் மற்றும் போஸ்டர்கள் வைத்துள்ளனர்.

8.00 AM : உலகமே ஆவலுடன் எதிர்பாத்திருந்த சர்கார் படம் இன்று பிரம்மாண்டமாக வெளியானது.

Actor Vijay A R Murugadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment