Sarkar Tamilrockers: தமிழ் ராக்கர்ஸ் vs சர்கார்... என்ன நடக்கிறது?

Tamilrockers Threats to release Sarkar HD Print: சர்கார் படத்திற்கு பகிரங்க மிரட்டல் விடுத்திருக்கும் தமிழ் ராக்கர்ஸை தமிழ் படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர்...

Sarkar Tamilrockers: தமிழ் ராக்கர்ஸ் மிரட்டலை சர்கார் எப்படி சமாளிக்கப் போகிறார்? என்பது தமிழ் சினிமா உலக ஹாட் டாக்! ஹெச்.டி தரத்தில் வெளியிடுவேன் என முன்கூட்டியே அறிவித்து மிரட்டல் விடுத்த தமிழ் ராக்கர்ஸுக்கு மூக்கணாங்கயிறு போடுவது யார்? தமிழ் ராக்கர்ஸ் – சர்கார் இடையிலான விவகாரத்தில் என்ன நடக்கிறது. சில தகவல்கள் இந்தக் கட்டுரையில்!

ஜோதிகாவின் காற்றின் மொழி லீக்? அடாவடியில் திருட்டுத் தளங்கள்

சர்காருக்கு அடித்தது லக்!

சர்கார்… வழக்கம்போல ஒவ்வொரு விஜய் படமும் சந்திக்கிற பிரச்னைகள் இந்தப் படத்தையும் சுழன்றடித்திருக்கின்றன. கதை விவகாரம் தொடர்பாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், வருண் ராஜேந்திரன் இடையே ஏற்பட்ட பிரச்னையால், குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாகுமா? என்கிற சந்தேகம் ஏற்பட்டது.

Read More: Sarkar Review : ரசிகர்கள் பார்வையில் சர்கார் எப்படி இருக்கிறது ?

 

இயக்குனர் பாக்யராஜ் தலையீட்டால், கதை பிரச்னை முடிவுக்கு வந்தது. அடுத்த பிரச்னை இணைய மிரட்டல்! இதற்கு கடிவாளம் போட படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிச்சர்ஸ் முன்கூட்டியே சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது. சென்னை உயர் நீதிமன்றமும் சுமார் 3000-க்கும் மேற்பட்ட இணையங்களுக்கு சர்கார் படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது.

தமிழர்களுக்கு சர்கார் படம் தரும் இரட்டை போனஸ் !

ஆனால் இதன்பிறகும் தமிழ் ராக்கர்ஸ் பெயரில் சில ட்விட்டர் பக்கங்களில், ‘சர்கார் படத்தை ஹெச்.டி தரத்தில் வெளியிடுவோம்’ என பகிரங்க மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே சர்கார் படக் கதை லீக் ஆனதில் அப்செட்டாகியிருக்கும் விஜய் தரப்பு, தமிழ் ராக்கர்ஸ் மிரட்டலையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறது.

Tamilrockers released Sarkar Tamil Movie HD Print:தமிழ் ராக்கர்ஸ், சர்கார், நடிகர் விஜய்

Tamilrockers Threats to release Sarkar HD Print: விஜய் எப்படி சமாளிக்கப் போகிறார்?

Tamilrockers vs sarkar : என்ன நடக்கிறது?

தமிழ் ராக்கர்ஸை முடக்க தமிழ் சினிமா உலகம் எத்தனையோ முயற்சிகளை எடுத்தபோதும் இதுவரை அதற்கு பலன் கிடைக்கவில்லை. ஒவ்வொரு படத்தையும் ரிலீஸ் ஆன சில மணி நேரங்களில் இணையதளத்தில் வெளியிடுவதையும் தமிழ் ராக்கர்ஸ் வழக்கமாக வைத்திருக்கிறது.

நடிகர் விஷால் நடிகர் சங்கப் பொதுச்செயலாளர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என இரட்டைப் பதவிகளை வைத்து வாள் சுழற்றியும் தமிழ் ராக்கர்ஸ் அடங்குவதாக இல்லை. இப்போது ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனம், பெரிய நடிகர், பெரிய இயக்குனர் ஆகியோர் இணையும் படத்திற்கு எதிராக தமிழ் ராக்கர்ஸ் விடுத்துள்ள சவாலை எப்படி சமாளிக்கப் போகிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள்?

நீயா நானா பார்த்திடலாம்… சர்கார் குழுவுக்கு சவால் விடும் தமிழ் ராக்கர்ஸ்

தமிழ் ராக்கர்ஸை முடக்க தொழில்நுட்ப ரீதியாக சில புதிய முயற்சிகள் தேவை என சிலர் குறிப்பிடுகிறார்கள். சினிமாத் துறையில் உள்ள சிலரது துணை இல்லாமல், படங்களை ரிலீஸ் தேதியில் காபி செய்வது சாத்தியமல்ல. எனவே அவர்கள் முதலில் திருந்த வேண்டும் என்கிற கருத்துகளும் இருக்கின்றன.

குறிப்பாக விஜய்யின் சர்கார் படம், முந்தினமே அமெரிக்காவில் பிரிவியூ ஷோ காட்டப்பட்டது. இது போன்ற வெளிநாட்டுக் காட்சிகள், திருட்டுத்தனமாக இணையதளங்களில் படம் வெளியாக காரணமாகிவிடுகிறது. இவற்றை தடுப்பது சாத்தியமற்றதாக இருக்கும் பட்சத்தில், இணையதளங்களில் பார்க்கிற மனபான்மை மாறவேண்டும்.

இது நடந்தால் மட்டுமே தமிழ் ராக்கர்ஸ் முன்கூட்டியே படங்களை வெளியிடுவது குறையும். இதற்கிடையே சர்கார் படத்தை ரிலீஸுக்கு முன்பாகவே தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டுவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளுக்கும் பஞ்சமில்லை.

இதற்கிடையே சர்கார் படத்திற்கு பகிரங்க மிரட்டல் விடுத்திருக்கும் தமிழ் ராக்கர்ஸை தமிழ் படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் எச்சரித்திருக்கிறார். என்ன நடக்கிறது என பார்க்கலாம்!

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close